india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 அன்று  அறிவிக்கப்படும் என்றும்  45 ஆண்டுகால சிபிஎஸ்இ மாணவர்களின் கல்வி ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்றும்  மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

                                               ***************

அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

                                               ***************

டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமானபைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

                                               ***************

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி ரூ.1,159.17 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

                                               ***************

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

                                               ***************

கேரளாவில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை கோரிய வழக்கில்  ரம்மி விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடர்களாக செயல்படும் பிரபல நடிகை தமன்னா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மலையாள நடிகர் அஜு வர்க்கீஸ் ஆகியோரும், கேரள அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்என்று கேரள உயர்நீதின்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

                                               ***************

உலகில் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியா வின் மெராபி எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.

                                               ***************

இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 

                                               ***************

இந்தியாவில் இருந்து 5 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைந்ததற்கு இலங்கை ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்சே நன்றிதெரிவித்துள்ளார்.

;