india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 2021-22  நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்தயாரிக்கும் பணியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக் கிழமையன்று தொடங்கிவைத்தார். முன்னதாக அல்வா தயாரிக்கும் பணியில் அமைச்சர் ஈடுபட்டார். பட்ஜெட் தயாரிக்கும்  அதிகாரிகளுக்கு அதனை வழங்கினார்.

                                                              **********************

இந்திய விமானப்படைக்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திவருவதாக விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

                                                            **********************

பாசனத்திற்காக நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து ஜனவரி 27ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

                                                            **********************

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்திடஅதிகாரிகள் குழு அமைக்கப்பட் டுள்ளது.

                                                            **********************

இந்தியாவும் சீனாவும் 9-வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான ராணுவ பேச்சுவார்த்தையை இன்று (ஜனவரி 24) சுசுல் துறைக்கு எதிரே உள்ள மோல்டோவில் நடத்துகின்றன.

;