india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

                                              **********************

பவானி சாகர் அணையிலிருந்து செல்லும் காளிங்கராயன் பாசன வாய்க்காலை அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் காலத்தை குறைக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் அரசு பதிலளிக்கக்கோரி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

                                              **********************

அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

                                              **********************

ஜிஎஸ்டி இதுவரை இல்லாத அளவாக டிசம்பரில் ரூ.1,15,174 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                              **********************

இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 75 லட்சம் வழங்கியது.

                                              **********************

இந்தியாவில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 பேராக அதிகரித்துள்ளது என்று  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

                                              **********************

பூர்வகுடியான பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய கீதத்தின் பாடல் வரிகளில் மாற்றம்  செய்து பிரதமர் ஸ்காட் மொரிசன்  அறிவித்துள்ளார்.  

                                              **********************

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். 

                                              **********************

ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

                                              **********************

ஒடிசா மாநிலம் புரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர்  மோடிக்கு முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். 

                                              **********************

ஜனவரி 4 முதல் பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

;