india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்  ஜனவரி 12 அன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

                                        ***************

கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                                        ***************

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் , புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து செவ்வாயன்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  

                                        ***************

நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராவ்சாகிப் படேல் தன்வே தெரிவித்துள்ளார்.

                                        ***************

பொங்கல் பரிசு, ரொக்கத்தொகையை அரிசி ரேசன் அட்டைதாரர்கள் பெறாமல் விடுபடுவதைத் தவிர்க்க, அவற்றை விநியோகம் செய்யும் கால அவகாசத்தை 25 ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                                        ***************

தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான தேர்வு அட்டவணையை பிப்ரவரி 4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                        ***************

ஏரிகளில் இருந்து உபரிநீர் வீணாக கடலில் கலப்பதால் தண்ணீர் திறப்பை நிறுத்த ஆந்திர அரசுக்கு, தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

                                        ***************

தில்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பாரம்பரிய குழு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

                                        ***************

அந்நியச் செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது.

                                        ***************

அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை 40 லட்சம் புதிய பதிவிறக்கங்களை சிக்னல் மற்றும் டெலிகிராம் பெற்றுள்ளது.

                                        ***************

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.

;