india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

முன்னுரிமை அடிப்படையில் இந்தியா 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ கோரிக்கை விடுத்துள்ளார். 

                                   *********************

பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட பைலட்டை பணி நீக்கம் செய்து கோ ஏர் நிறுவனம்உத்தரவிட்டுள்ளது. ஊழியர் வெளிப்படுத்திய தனிப்பட்ட கருத்துக்குவிமான நிறுவனம் பொறுப்பேறக் காது என்றும் விளக்கம் அளித்துள் ளது. 

                                   *********************

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

                                   *********************

நாட்டில், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம்,கேரளம், கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், குஜராத் 7  மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

                                   *********************

மாயமான விமானம் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

                                   *********************

கடந்த ஜூன் மாதம் முதல் 7 மாதங்களில் இந்தியாவில் 33 ஆயிரம் டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

                                   *********************

செம்மரக்கடத்தலில் கைதான சசிகலாவின் உறவினரும் இளவரசியின் சம்பந்தியுமான பாஸ்கரனிடமிருந்து துப்பாக்கி, தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சர்வதேச அளவிலான தொடர்பு குறித்து ஆந்திர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

                                   *********************

முதல்வருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணைக்கு விதித்த  இடைக்காலத் தடையை நீக்கவும்,  3 அமைச்சர்கள் மீதான விசாரணையை தொடரவும் ஜனவரிக்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு மாபெரும்  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

                                   *********************

புதுச்சேரி ஜிப்மரில் சிறப்புக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் கோபமடைந்த மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;