india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

                                          ****************

விருப்ப ஓய்வு கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்.  பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                          ****************

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

                                          ****************

திரையரங்குகளில் 100 சதவீதஇருக்கைகளில் பார்வையாளர் களை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விதிமீறல் என்று மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

                                          ****************

ஒடிசா மாநிலம் ரூர்கேலா உருக்காலையில் நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 

                                          ****************

பொது சுகாதார மையங் களில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை ரூ 201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

                                          ****************

இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவியுள் ளது என்றும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கப்பட்டது என்றும் முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

                                          ****************

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநிலம்முழுவதும் 4, 266 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

                                          ****************

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2 ஆயிரம்அபராதம் விதிக்க புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் புகைப்பிடிப்ப தற்கான வயதை 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்தவும்   திட்டமிட்டுள்ள தாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

                                          ****************

சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது. 

                                          ****************

உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

                                          ****************

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனவரி 6 புதன்கிழமையன்று இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இதில் இரு தரப்புஉறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

;