india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

நடைபெற உள்ள மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு குறித்துமுடிவு செய்ய காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

                                           ***************

கடந்த 11 நாள்களில் மட்டும் ஒரு கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

                                           ***************

இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

                                           ***************

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

                                           ***************

பெங்களூரு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கியுள்ளது.

                                           ***************

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும்பனிப்பொழிவு காரண மாகத் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

                                           ***************

அரக்கோணம் - சேலம் இடையே வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

                                           ***************

சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தப்பேரியில்  பி.எச்.பாண்டியன் மணி மண்டப  திறப்புவிழாவில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.

                                           ***************

தில்லி மாநில அரசு உருவாக்கியுள்ள தமிழ் அகாடமி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

                                           ***************

பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள் ளார்.

                                           ***************

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் லேசான காய்ச்சல் காரணமாக ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கே.எச்.அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

                                           ***************

புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கொரோனா மருந்து வரும் வாய்ப்பு இருப்பதாக முதல்வர்வே.நாராயணசாமி தெரிவித்துள் ளார்.

                                          ***************

60 வயதைக் கடந்த 85 லட்சம் இந்தியன் தாத்தாக்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

;