india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

‘இதயத்தில் கிராமங்கள்..’பிரதமர் மோடியின் அளப்பு!
2021-22 பட்ஜெட் கடும்விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில், பிரதமர் மோடி மட்டும் “கடினமான சூழலில் மிகவும் சிறப் பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய் துள்ளார்” என்றும் இது அனைத்து தரப்பினருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்” என்றும் பாராட்டியுள்ளார். “விவசாயிகளையும், கிராமங்களையும் தன் இதயத்தில் கொண்டுள்ளதாக பட்ஜெட் உள்ளது” எனவும் கூச்சப்படாமல் பேசியுள்ளார்.

                         ************************

டிஜிட்டல் குதிரையில் கனவுச் சுற்றுலா!

“அசாம், கேரளா, தமிழகம், மேற்குவங்கம் ஆகிய தேர்தல் நடக்கும் மாநிலங்களை மையமாக வைத்து, அங்குள்ள மக்களின் வாக்குகளை கவருவதற்காக பட்ஜெட்டில் சிலசலுகைகளை மத்திய அரசுஅறிவித்துள்ளது. மற்றபடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் குதிரையில் மக்களைக் கனவுச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுதான் 2021-22பட்ஜெட்” என்று சிவசேனா கூறியுள்ளது.

                         ************************

ராவணனின் இலங்கை ரூ. 51 ராமனின் இந்தியாவோ ரூ. 93

ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் 93 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்குபெட்ரோல் கிடைக்கிறது என பாஜக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். சீதை பிறந்த நாடான நோபாளத்திலும் கூட ஒரு லிட்டர் பெட்ரோல்விலை 53 ரூபாய்தான் என்று டுவிட்டரில்பதிவிட்டு, மோடி அரசின் நிர்வாக லட்சணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

                         ************************

விவசாயிகளுடன் யுத்தம் ஏதும் நடத்துகிறீர்களா..?

விவசாயிகளைத் தடுக்கும் வகையில் தில்லி- மீரட் சாலையில், மோடி அரசு முட்கம்பியுடன் கூடிய தடுப்பு வேலியை அமைத்துள்ளது. கம்பி வளையங்கள், மஞ்சள் நிற பேரிகேடுகள் 4 அடுக்குகள்- இவை போதாது என்று சாலைகளில் ஆணிகளையும் பதித்துள்ளது. இதனை விமர்சித்துள்ள  காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி “மதிப்பிற்குரிய பிரதமர் மோடிஅவர்களே, நீங்கள் விவசாயிகளுடன் போரில் ஏதும் ஈடுபட்டுள்ளீர்களா?” என்று கேட்டுள்ளார்.

                         ************************

விழிஞ்ஞம் துறைமுகத்தை காங்கிரஸ் ஏன் கொடுத்தது?

“மோடி அரசு தனது பணக்கார நண்பர்களுக்கு நாட்டின் வளங்களை தாரை வார்க்கிறது என்ற கருத்தை ராகுல்காந்தி 15 நாட்களுக்கு ஒருமுறை சொல்கிறார். கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது, விழிஞ்ஞம் துறைமுக மேம்பாட்டு பணியை அவரது கட்சியும் அதே பெரும்பணக்காரருக்குத்தான் (அதானி குழுமம்) கொடுத்தது. இதற்கு ராகுல் காந்தி என்னவிளக்கம் தருவார்? என்று மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுள்ளார்.

                         ************************

பீகாருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?

“நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது பெயரளவிலான பட்ஜெட். தேர்தல் வரவுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாருக்கு தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகள் எதையாவது பட்ஜெட்டில் மத்திய அரசுஅறிவித்துள்ளதா? அந்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே போயின? தேர்தல் முடிந் தது, வாக்குறுதிகளும் முடிந்துவிட்டன. தற்போதும் அதுதான் நடக்கும்” என்று மகாராஷ்டிரஅமைச்சர் சாகன் புஜ்பால் கூறியுள்ளார்.

                         ************************

உ.பி. பாஜக எம்எல்ஏ-வுக்கு பாக். எண்ணிலிருந்து மிரட்டல்?

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா சதர் தொகுதி பாஜக எம்எல்ஏ சரிதா பதவுரியாவுக்கு, ஐஎஸ்ஐ அடையாளத்துடன் பாகிஸ்தானிலிருந்து ‘வாட்ஸ் ஆப்’பில் சில செய்திகள் வந்துள்ளதாகவும், அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகதலைவர்களை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பதவுரியாவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது கணவர் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என எம்எல்ஏசரிதா பதவுரியா தெரிவித்துள்ளார்.

;