india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

எங்களுக்கும் மோடிதான் பிரதமர்!

“எங்களுக்கும் பிரதமர் மோடிதான்.. நாங்களும் அவருக்குதான் வாக்களித்தோம். பிரதமரின் கண்ணியத்தை மதிக்கிறோம்... ஆனால் சுயமரியாதையை விட்டுத்தர மாட்டோம். தில்லி சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என்றுவிவசாயிகள் தலைவர் ராகேஷ் டிக்கெய்ட் கூறியுள்ளார்.

                                     ******************** 

ஆட்சி நடத்த தெரியாத இயந்திரம் பாஜக!

‘‘பாகிஸ்தான் மற்றும்சீனா மட்டுமன்றி நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கையுடனும் நம்முடைய உறவுகள் நன்றாகஇல்லை. இதனால் எல்லையில் உள்ள மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். மோடி அரசு தேர்தலில் வெற்றிபெறும் இயந்திரமாக மட்டுமே உள்ளது’’ என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

                                     ******************** 

பத்திரிகையாளர்கள் மீது 5 மாநிலங்களில் வழக்கு!

விவசாயிகள் போராட்டச் செய்தியை வெளியிட்டதற்காக, பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணாள் பாண்டே, ஜாபர் ஆகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் மற்றும் வினோத் கே. ஜோஸ் ஆகியோர் மீது பாஜகஆளும் உ.பி., ம.பி. மாநில அரசுகள் தேசத் துரோகம், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தன. தற்போது பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி, ஹரியானா, கர்நாடகா காவல்துறைகளும் வழக்குகளை பதிவு செய்துள்ளன.

                                     ******************** 

திரிணாமுல் கட்சி காணாமல் போய்விடும்!

“திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருஎம்.பி. மற்றும் 15 எம்எல்ஏ-க்கள், பாஜக-வுக்கு தாவிவிட்ட நிலையில், விரைவில் திரிணாமுல் கட்சி முழுவதுமே பாஜக-வில்கரைந்து விடும். அந்தக் கட்சியே இருக்காது. பிப்ரவரி 28-க்குள் திரிணாமுல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி மொத்தமாக காலியாகி விடும்” என்று சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேசியுள்ளார்.

                                     ******************** 

காந்தி கொலையை சரியாக விசாரிக்கவில்லை!

“மகாத்மா காந்தி படுகொலைக்கு சாவர்க்கர் ஒரு சதிகாரர் என்று நீதிபதி கபூர் கமிஷன் அறிக்கை கூறியது. ஆனால், காந்தியின் படுகொலை குறித்து அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் முறையாக விசாரிக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், ஆர்எஸ்எஸ் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பார்” என்று மஜ்லிஸ் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார்.

                                     ******************** 

தெலுங்கானா பாஜக எம்எல்ஏவுக்கு சிறை!

“2015-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம்பொல்லாரம் காவல்நிலைய போலீசாரைத் தாக்கிய வழக்கில், அம் மாநில பாஜக எம்எல்ஏராஜாசிங்-கிற்கு, ஹைதராபாத் நாம்பல்லி சிறப்புநீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றத்தால் தெலுங்கானாவில் தண்டிக்கப் பட்ட முதல் நபர்என்ற ‘பெருமை’யை ராஜா சிங் பெற்றுள்ளார்.

                                     ******************** 

எடியூரப்பா பதவியை நாங்களே பறிப்போம்..!

“இனி நான் அமைச்சர் பதவி கேட்டு (எடியூரப்பாவிடம்..)கையேந்தப் போவதில்லை. நம்மில் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு வந்து நமக்கு அமைச்சர் பதவி வழங்குவார் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் அடுத்த முதல்வர் வட கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று பாஜக எம்எல்ஏ பசனகவுடா கூறியுள்ளார்.

                                     ******************** 

எங்களை ‘பி’ டீம் என்று சொல்ல வேண்டாம்

கர்நாடகத்தில், 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய, காங்கிரஸ், பாஜக-வுக்கு அவகாசம் அளித்தது போல, மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும் அவகாசம் வழங்க வேண்டும். பாஜக-வின் பி. டீம் என்று எங்கள் கட்சியைகூறுவதை நான் கண்டிக்கிறேன் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆவேசப்பட்டுள்ளார்.

;