india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தேசிய அளவியல் மாநாட்டில்  காணொலி மூலம்  இன்று துவக்கவுரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். 

                                  **************** 

விவசாயிகளுக்கு விரோதமான மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறாகக் கருத்துக்கள் தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின்படேல், பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

                                  **************** 

புதுச்சேரி எந்த மாநிலத்துடனும் இணைக்கப்படாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

                                  **************** 

தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கடந்த 2 நாட்களில் 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 18 வயது சிறுவனும் கடும்குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார்.

                                  **************** 

உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரசுகளாவது பரவியிருக்கக்கூடும்  என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

;