india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

சிபிஎஸ்இ- 10 ஆம் வகுப்புக் கான பொதுத்தேர்வு  மே 4 முதல்ஜூன் 7 வரையும் சிபிஎஸ்இ- 12 ஆம்வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4 முதல்  ஜூன் 11 வரையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

                                                                    *********************

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) உருவாக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக  நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு  பதில் அளித்துள்ளது.

                                                                    *********************

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்குமாறிய ஆதிதிராவிட மாணவர்களி டமிருந்து மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு பிப்ரவரி 7 வரை  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

                                                                    *********************

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                                                    *********************

கோடியக்கரை வன உயி ரின சரணாலயம் பார்வையாளர்களுக்கு 11 மாதங்களுக்குப் பின்னர் செவ்வாயன்று திறக்கப்பட்டது.

                                                                    *********************

பெங்களூருவில் இன்று  13-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

                                                                    *********************

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,014 கனஅடியி லிருந்து 852 கனஅடியாக குறைந்துள்ளது.

                                                                    *********************

2020-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெறும் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமேவருகை தந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள் ளது.  

                                                                    *********************

விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி 200 டிவிட்டர் கணக்குகளை முடக்கும்படி மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

                                                                    *********************

பெண் சக்தி விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

                                                                    *********************

நீட் மோசடி விவகாரத்தில் கைதான பரமக்குடி மாணவி  தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை  பல் மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. 

                                                                    *********************

ஜம்மு - காஷ்மீர் எல்லைகளில் பாதுகாப்புப் படையினரால் 2020ஆம் ஆண்டு 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

                                                                    *********************

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்காவில் புலம்பெயர் இந்தியர்களின் பல்வேறு அமைப்புகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச இந்திய முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

                                                                    *********************

தில்லியில் இஸ்ரேல் தூதரகம்அருகே நடந்த குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வுமுகமையிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

                                                                    *********************

தமிழகத்தில் செவ்வாயன்று 510 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 521 பேர்  குணமடைந்து டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளனர். 

                                                                    *********************

மியான்மருக்கு அவசியத் தேவையின்றி இந்தியர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

                                                                    *********************

தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படாமல் முன்வாருங்கள் என்று தமிழக சுகாதார செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

                                                                    *********************

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். 

;