india

img

82 நாட்களாக தொடரும் போராட்டம்..... 40 லட்சம் டிராக்டர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விவசாயிகள் முடிவு.....

புதுதில்லி:
தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி எல்லை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் திங்களன்று  82வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஆதரவை பெறுவதற்காக 40 தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.40 லட்சம் டிராக்டர்களை கொண்டு இம்முறை பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ள னர். மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் வரும் 18ம் தேதி நாடு முழுவதும் நான்கு மணி நேரம்ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 6ம் தேதி மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;