india

img

பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீடு.... பள்ளிகளுக்குக் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு....

புதுதில்லி:
பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், சிபிஎஸ்இ வாரியத்தில் சமர்ப்பிக்கவும் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன.மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையைக்கணக்கிடப் புதிய முறையை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டது. அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மனநிறைவைத் தரவில்லை என்றால், அந்தமாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச்சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால்தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், தொற்றுப் பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனாலும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்திடம் பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதிஜூன் 30 ஆகும். மீதமுள்ள பிற செயல்பாடுகளுக்குத் தேர்வு முடிவுகளை வெளியிடும் குழு, கால அட்டவணையைத் தயாரித்து வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

;