india

img

விவசாயிகளுக்கு ஆதரவாக டெண்டுல்கர் பேச வேண்டும்.... ஆம் ஆத்மி-யின் பிரீத்தி சர்மா வலியுறுத்தல்....

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டர் தன்பெர்க் ஆகியோர் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், பாடகி லதாமங்கேஷ்கர் உள்ளிட்டோர், மத்திய அரசை ஆதரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டனர். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, டெண்டுல்கருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. சச்சின் தானாகவே கருத்து தெரிவித்தாரா? அல்லது பாஜக அவரைத் தூண்டி விட்டதா? என்று பலரும் கேள்விகளை எழுப்பினர்.இந்நிலையில், மகாராஷ்டிராவின் பண்டர்பூரை சேர்ந்த ரஞ்சித் பாகல் என்ற வாலிபர், மும்பையில் டெண்டுல்கர் வீட்டின் முன்பு நின்றபடி, “விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் எப்போது கருத்து கூறுவீர்கள் சச்சின்?” என்ற பதாகையைத் தூக்கிப்பிடித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.இந்நிலையில், ரஞ்சித் பாகலின் அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரீத்தி சர்மா மேனன், “சச்சின் டெண்டுல்கர் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு முறை கருத்து பகிர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேரடியாகவும் அவர் டெண்டுல்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

;