india

img

வெப்பநிலை அதிகரிப்பே உத்தரகண்ட்டில் பனிப்பாறை உடைப்பு பேரழிவுக்கு காரணம்.... ஆய்வில் தகவல்....

டேராடூன்:
40 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரித்ததே உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டுமானத்தில் இருந்த 2 நீர்மின் நிலையங்கள் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த கோரச் சம்பவத்தில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 132 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உத்தரகண்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கனமழையால் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து விழுவதற்கு காரணம் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ஐ.சி.ஐ.எம்.ஓ.டி) என்கிற அமைப்பு உத்தரகண்ட் பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சூரிய கதிர் வீச்சின் வெளிப்பாடு அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாகப் பனிப்பாறைகளின் ஸ்திரத்தன்மை குறைந்து பாறைகள் உடைந்திருக்கக்கூடும். அத்துடன் பிப்ரவரி 4 முதல் 6 ஆம் தேதி வரையிலான கடுமையான மழை பொழிவும் இந்த பேரிடர் நிகழ்வதற்குக் காரணமாக இருந்திருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;