india

தமிழகத் தேர்தல்... 1ம் பக்கத் தொடர்ச்சி...

1ம் பக்கத் தொடர்ச்சி... 

வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.  வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்துக்கொள்ளலாம்

வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வாக்கு கேட்கலாம். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமேவீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளலாம். வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரகுமார், சிறப்பு அதிகாரியாக அலோக்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். புதுச்சேரியில் தொகுதிக்கு ரூ.22 லட்சம், மற்ற 4 மாநிலங்களில் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவுக்கு அனுமதிக்கப்படும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில்  ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் வேட்புமனுக் களை மார்ச் 12ஆம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 22 கடைசி நாளாகும். மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆம் தேதி ஆகிய  3 கட்டங்களாக தேர்தல்நடைபெறும். 5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும்.நாடு முழுவதும் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களும் தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று  தலைமைத் தேர்தல்  ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக  மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம் என்றும் தெரிவித்தார். இதனிடையே தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார் அவர்.

;