india

img

சித்தாந்தத்திற்கு இடமில்லை எனில் தாவல்கள் எளிதாகி விடும்... பாஜக-வுக்கு போன ஜிதின் பிரசாதா மீது கபில் சிபல், சசிதரூர் தாக்கு.....

புதுதில்லி:
கடந்த 2020 ஆகஸ்டில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபேந்தர்ஹூடா, பிரிதிவிராஜ் சவான், கபில் சிபல், மணிஷ் திவாரி, முகுல் வாஸ்னிக், வீரப்ப மொய்லி, ரேணுகா சவுத்ரி, ஜிதின் பிரசாதா, சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு எழுதிய கடிதம்  காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. 

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதே இவர்கள்எழுதிய கடிதத்தின் சாரம் என்று கூறப்பட்டாலும், உண்மையில் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு உள்ள குறைந்தபட்ச நம்பிக்கையையும் இந்த கடிதம் குலைப்பதாகவே பார்க்கப்பட்டது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதோ என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டது. இவர்கள் ‘ஜி23’ தலைவர்கள் என்றும் நாமகரணம் சூட்டப்பட்டனர்.இதனிடையே, கடிதம் எழுதிய தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா தற்போது பாஜக-விலேயே சேர்ந்து விட்டதைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றி கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்களும் பாஜக-வில் இணைவார்கள் என்று யூகங்கள் வெளியாகின.இந்நிலையில், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள கபில் சிபல், ‘நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். ஒருபோதும்காங்கிரசில் இருந்து விலகமாட்டோம்.

நான் என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பாஜக-வில் சேர வேண்டும் என நினைத்ததே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் என்னை கட்சியை விட்டு நீக்கினால் கூட பாஜக-வுக்கு போகவே மாட்டேன்’ என்று தனது நிலைபாட்டைத் தெரிவித்துள்ளார்.மறுபுறம் ஜிதின் பிரசாதா காங்கிரசில் சேர்ந்திருப்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கபில் சிபல் விமர்சித்துள்ளார். ‘ஜிதின்பிரசாதா பா.ஜ.க.வில் சேர்ந்திருக் கிறார். அவருக்கு பாஜக-வில் இருந்து பிரசாதம் கிடைக்குமா அல்லது அவர் உ.பி. தேர்தலுக்காக பிடிக்கப்பட்டுள்ள ஒரு ‘கேட்ச்’தானா? என இனிமேல்தான் தெரியும்’ என்று கூறியுள்ள கபில் சிபல், ‘இது போன்ற பேரங்களில் சித்தாந்தம் ஒரு பொருட்டே இல்லை என்றாகி விட்டால் தாவல்கள் எளிதாகிவிடும்’ என்றும் சாடி உள்ளார்.‘ஜிதின் பிரசாதா ஏதோ சில காரணங்களுக்கு சில நடவடிக்கை களை மேற்கொள்கிறார். அதனை நான் எதிர்க்கவில்லை. அதற்காக அவர் பாஜக-வில் போய் இணைந்ததைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல ‘ஜி23’ தலைவர்களில் ஒருவரான சசி தரூரும் ஜிதின் பிரசாதாவை சாடியுள்ளார். ‘அரசியல் என்பது கொள்கையற்ற வாழ்வாக இருக்க முடியுமா? கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டிருப்பதுபோல நம்பிக்கை உள்ள ஒருவர் அரசியல் கட்சிகளை மாற்ற முடியுமா?’ என்றுடுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜிதின் பிரசாதா தனிப்பட்ட தேவைகளுக்காகவே பாஜகவில் இணைந்திருக்கிறார். அவர் கொள்கை உறுதி அற்றவர் என்பது தெரியவந்துள்ளது. தகுதியற்றவர்கள் ஒருப்போதும் ம‌க்கள் த‌லைவர் ஆக முடியாது என்று மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லியும் விமர்சித்துள்ளார். ஆங்கிலத்தில் பேசுவதாலேயே ஒருவர் பதவிபெறும் நிலை தொடரக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;