india

img

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உயிர்ப்பயம்.... வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய இந்தியப் பெருமுதலாளிகள்...

புதுதில்லி:
இந்தியாவில் நாளுக்கு நாள்கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில்,உயிர்ப் பயத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்தியப் பெருமுதலாளிகள் பலர் குடும்பத்துடன் இங்கிலாந்திற்குத் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

இந்தியாவிற்கான பயணிகள் விமானச் சேவைகளை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளநிலையில், பல லட்சங்களைச் செலவிட்டு தனி விமானங்களை அமர்த்தி இவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்துள்ளனர்.ஏப்ரல் 23 அதிகாலை 4 மணிக்குப்பின் இந்தியாவில் இருந்து எந்த ஒரு விமானத்தையும் இங்கிலாந்து நாட்டிற்குள் அனுமதிப்பது இல்லைஎன பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே அறிவித்து விட்டதால், சுதாரித்துக் கொண்ட இந்திய முதலாளிகள், அடித்துப் பிடித்துக்கொண்டு வெளிநாடு ஓட ஆரம்பித்தனர். இதனால் ஏப்ரல் 19 முதல் 23 வரை இங்கிலாந்து சென்ற அனைத்து விமானங்களும் நிரம்பி வழிந்தன.

இதனை காரணமாக வைத்து கூடுதலாக எட்டு பயணிகள் விமான சேவைக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், லண்டன் விமான போக்குவரத்து நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்து விட்டது.அதை தொடர்ந்து, சிறியரக தனிவிமான சேவைக்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு இசைவு தெரிவித்த இங்கிலாந்து அரசாங்கம், எத்தனை விமானங்கள், யார் யார் பயணிக்கிறார்கள், எங்கு தங்க போகிறார்கள்? என்ற தகவலை பெற்றுக் கொண்டு, அந்த தனியார் விமானங் கள் அனைத்தும் லண்டனின் மற் றொரு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளித்தது.அனுமதி கிடைத்ததை அடுத்து,மிச்சமிருந்த இந்திய பெருமுதலாளிகளும், தங்கள் சொந்த விமானங்கள்தவிர இரவல் மற்றும் வாடகை விமானங்கள் என்று மொத்தம் எட்டு விமானங்களில் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுள்ளனர்.இதில் நான்கு விமானங்கள் மும்பையில் இருந்தும், மூன்று விமானங்கள் தில்லியில் இருந்தும் ஒரு விமானம் அகமதாபாத் நகரில் இருந்தும் சென்றதாக இங்கிலாந்து விமான போக்குவரத்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

6 பேர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய விமானத்திற்கு ஒரு மணி நேரவாடகை மட்டும் சுமார் 4 லட்சம். 9 நபர் வரை பயணிக்கும் விமானத் திற்கு 8 லட்சம். 19 பேர் வரை பயணம் செய்யும் விமானத்திற்கு 16 லட்சம். இது தவிர எரிபொருள் மற் றும் இதர செலவுகள் உள்ளன. இவ்வாறு பணத்தைக்கொட்டிக் கொடுத்து, உயிர்ப் பயத்தில் இந்தியாவை விட்டுக் காலி செய்துள்ளனர்.

;