india

img

டிராக்டர் அணிவகுப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு....

புதுதில்லி:
குடியரசுத் தினத்தன்று தலைநகர் தில்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் அணிவகுப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில்...
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் 54வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியரசு தினத்தன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணிக்கான முழுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள னர். இந்நிலையில் இதனை தடை செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தில்லி போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்குதிங்களன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தலைநகர் தில்லியில் ராஜபாதையில் குடியரசு தின பேரணி நடைபெறவுள்ளது. அச்சமயம் டிராக்டர் பேரணி நடத்துவதன் மூலம் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்; அதனால் டிராக்டர் பேரணியை தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்துதலைநகரில் சட்டம் - ஒழுங்கை காக்கும் பொறுப்புதில்லி போலீஸ் கையில் உள்ளது. தலைநகரில்யாரை அனுமதிக்கலாம்; யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை தில்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் தாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

தாங்கள் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்த பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அது காவல்துறையின் கரங்களை வலுப்படுத்தும் என்றும் அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.“உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை நாங்கள் கூற வேண்டும் என ஏன்விரும்புகிறீர்கள்? நீதிமன்றத்தின் தலையீடு என்பது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. யார் நகரத்திற்குள் வருகிறார்கள், யாரை எல்லாம் அனுமதிக்கலாம் என்று நாங்கள்பார்த்துக் கொண்டிருக்க முடியாது”, என்று அவரிடம் அப்போது தெரிவித்தனர் நீதிபதிகள்.

விவசாயிகள் திட்டவட்டம்
இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் அணிவகுப்பு உறுதியாக நடத்தப்படும் என்றும், இது அமைதியான முறையிலும், அரசின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாத விதத்திலும் நடத்தப்படும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (விவசாய சங்கங்களின் முன்னணி) அறிவித்துள்ளது.விவசாயிகளின் அணிவகுப்பில் இடம் பெறும்டிராக்டர்கள் அனைத்தும் தேசியக் கொடியைஏந்தி வரும் என்றும் தலைவர்கள் தெரிவித்தார் கள். இதேபோன்று டிராக்டர்கள் அணிவகுப்பு நாட்டின் அனைத்து மாவட்ட, மாநிலத் தலைநகர்களிலும் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். விவசாயிகளின் அவலநிலையை உயர்த்திப்பிடித்திடவே இந்த அணிவகுப்பு நடத்தப்படுவ தாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா கூறினார்.

;