india

img

ராம்தேவின் ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.... அலோபதி மருத்துவம் குறித்த அவதூறு பேச்சு....

புதுதில்லி:
நவீன அறிவியல் (அலோபதி) மருத்துவ முறை குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்குமாறு ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது; அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைத்த டெம்டெசிவிர் போன்ற மருந்துகள்தான், கொரோனா உயிரிழப்பு அதிகரித்ததற்கு காரணம் என்று ‘பதஞ்சலி’ என்ற கார்ப்பரேட் ஆயுர்வேத நிறுவனத்தின் முதலாளியும், சாமியாருமான ராம்தேவ் பீதியை ஏற்படுத்தினார். நெருக்கடியான நோய்த்தொற்றுக் காலத்தில் ராம்தேவின் இந்த பொறுப்பற்ற பேச்சு மருத்துவர்கள் மீதும், நவீன மருத்துவத்தின் மீதும்பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் என்பதால், அவர் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் (IMA) ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் அளித்தன. அதன்பேரில்வழக்குகளும் பதிவு செய்யப்பட் டன.

இந்நிலையில், தன்மீதான வழக் குகள் அனைத்தையும் தில்லிக்கு மாற்றக்கோரிய ராம்தேவின் வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. ராம்தேவ் சார் பில் ஒன்றிய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி வாதாடினார். அப்போது “ராம்தேவ் உண்மையில் என்ன பேசினார்? அதுதொடர்பான ஆவணங்கள் முழுவதுமாக சமர்ப்பிக்கப்படவில்லையே ஏன்? என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா கேள்வி எழுப்பினார். 

அதற்கு, ராம்தேவ் பேசிய ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்கமுடியும் என முகுல்ரோத்கி பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குவிசாரணையையும் ஜூலை 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

;