india

img

நீட் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நிறுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளாமோ படிப்புகள், நீட்-முதுநிலை தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு கடந்த 11-ஆம் தேதி இணையவழியே நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 20 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட இந்தியா முழுவதும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதினா். இதைத்தொடர்ந்து நீட் தோ்வு முடிவுகளை இணைதளங்களில் தேசிய தோ்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. 
இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான ஆண்டு வருவாய் ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து வழக்கு நீதிமன்றம் நிலுவையில் உள்ளது.  இதனால் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டாம், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்த பிறகு கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..

;