india

img

கோவா மாநில ஆளுநராகிறார் சுனில் அரோரா? பல்வேறு தேர்தல்களில் பாஜகவுக்கு காட்டிய சலுகைக்கு பரிசு...

புதுதில்லி:
தங்களுக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளில் நியமிப்பதும், ஏற்கெனவே அதுபோன்ற பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால், அவர்களை பணிஓய்வுக்குப் பிறகும் வேறொரு பதவியில் நியமித்து, ‘நன்றாக கவனித்து’ கொள்வதும் மத்திய பாஜக அரசின் நடைமுறையாக மாறி விட்டது.

ரபேல் ஊழல், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், குடியுரிமைப் பதிவேடு, ராமர் கோயில், காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து ஆகியவை தொடர்பான வழக்குகளில், பாஜக-வுக்கும் மத்திய அரசுக்கும் சாதகமான தீர்ப்பை வழங்கியதாக கடும் விமர் சனங்களுக்கு உள்ளானவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். இந்நிலையில் அவரை,பதவி ஓய்வுபெற்ற 4 மாதங்களுக்குள் ளாகவே மாநிலங்களவை நியமன எம்.பி. ஆக்கியது மத்திய பாஜக அரசு. இதேபோல பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள் ளிட்ட 32 பேரை விடுதலை செய்த, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவுக்கு, பதவி ஓய்வுபெற்ற உடனேயே உத்தரப்பிரதேச மாநில லோக் ஆயுக்தா துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.இந்த வரிசையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி, கடந்த வாரம் பணி ஓய்வுபெற்றசுனில் அரோராவும் இணையவுள்ளார். சுனில் அரோரா, விரைவிலேயே கோவா மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.2018 டிசம்பரில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட சுனில் அரோரா, தனது பதவிக்காலம் முழுவதும் பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆவார். 2019 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வெறுப்பைக் கக்கும் சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள், திடீரென முளைத்த ‘நமோடிவி’யின் ஒளிபரப்புகள் என எதையும் அரோரா தடுக்கவில்லை. பிரதமர்நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மதவெறி பேச்சுக்கள் மூலம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்ட போது, அவற்றின்மீது சுனில்அரோரா நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, சக தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதற் காக பின்னாளில் அசோக் லவாசா, தேர்தல் ஆணையத்திலிருந்தே தூக்கியடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார் என்பது வேறு கதை.ஆனால், 2018 முதல் அண்மையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 4 மாநிலத் தேர்தல் வரை சுனில் அரோரா, பாஜக தலைவர்கள் மனம்கோணும்படி ஒருதடவை கூட நடந்துகொண்டதில்லை.இவ்வாறு சுனில் அரோரா காட்டியவிசுவாசத்திற்காகவே, மத்திய பாஜகஅரசு விரைவில் அவரை கோவாமாநில ஆளுநராக நியமிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கோவா ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், விவசாயிகள் போராட் டம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில், அவரை அண்மையில் பதவியிலிருந்து நீக்கிய மத்திய அரசு, புதிய ஆளுநரை நியமிக்காமலேயே உள்ளது. அந்த இடத்திற்குத்தான் அரோராவை தற்போது யோசித்துள்ளதாக கூறப்படுகிறது.

;