india

img

பெண் பத்திரிகையாளர்களுக்குக் கிடைத்த வெற்றி... பாஜக அமைச்சர் தொடுத்த வழக்கில் பெண் பத்திரிகையாளர் விடுவிப்பு.... பத்திரிகையாளர்கள் சங்கங்கள் வரவேற்பு....

புதுதில்லி:
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தி ஆசியன் ஏஜ் இதழின் முன்னாள் ஆசிரியருமான  எம்.ஜே.அக்பர், பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மானநஷ்ட வழக்கில், பிரியா ரமணி விடுதலைசெய்யப்பட்டிருப்பதை தேசியப் பத்திரிகையாளர் கூட்டணி (NAJ-National Alliance of Journalists)யும், தில்லி பத்திரிகையாளர் சங்கமும் (DelhiUnion of Journalists) வரவேற்றுள்ளன.

இது தொடர்பாக அந்த சங்கங்களின் சார்பில்அதன் நிர்வாகிகள் எஸ்.கே. பாந்தே, சுஜாதா மாதோக் மற்றும் மஞ்சரி ஆகியோர் இணைந்துவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி ஆசியன் ஏஜ் இதழில் பணியாற்றிவந்த பிரியாரமணி, தன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அக்பர் தன்னிடம் பாலியல் சீண்டல்களைச் செய்தார் என்று துணிவுடன் எழுதியிருந்தார். இவ்வாறு இவர் சமூக ஊடகங்களில் இந்த விஷயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பின்னர் பல பெண்கள் தங்களுக்கும் இதுபோல் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்களை, ஹேஷ்டேக் மீ டூ (#MeToo) என்னும் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்கள்.  இந்த விஷயங்கள் இரண்டுஆண்டுகளுக்கு முன் நடைபெற்றன. இதுபோல்14 பெண் இதழாளர்கள் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பதிவு செய்திருந்தனர். ஆயினும்அக்பர், மற்றவர்களின் குற்றச்சாட்டுகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரியா ரமணிமீது மட்டும் மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில்தான் இப்போது பிரியா ரமணிவிடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பின், பிரியா ரமணிஇதுகுறித்துக் கூறுகையில், “இது எனக்கு பல்வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் பாலியல் சீண்டல்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த அனைத்துப் பெண்களின் சார்பாகவும் எங்கள் கோபம் நியாயமானது என நிரூபிக்கப்பட்டதாகவே நான் உணர்கிறேன். பணிபுரியும் இடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை வெளிக்கொணர்ந்தது நானாக இருந்தபோதிலும்கூட, இதற்காக நான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவளாக நின்றபோதிலும்கூட, அவைஅதற்குரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது” என்றார்.

தேசியப் பத்திரிகையாளர் கூட்டணியும், தில்லிபத்திரிகையாளர் சங்கத்தின் பாலின சமத்துவக் கவுன்சிலும் இந்த வழக்கில் பிரியா ரமணிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான் அவர்களின் நிகரற்ற செயல்பாடுகளைப் பாராட்டுகின்றன. அவர் ஒரு வலுவான நபருக்கு எதிராக மிகவும் சிரமமான வழக்கைதுணிச்சலுடன் எடுத்து நடத்தியிருக்கிறார்.இது தொடர்பாக ரெபெக்கா ஜான் கூறும்போது,“இது என் வழக்கறிஞர் தொழிலில் மிகவும் முக்கியமான வழக்கு” என்று குறிப்பிட்டார். பிரியாரமணி, பொதுநலனுக்காக உண்மைகளைப் பேசியிருக்கிறார் என்பதன் அடிப்படையில் அவர் தன்வாதங்களைநீதிமன்றத்தில் எடுத்து வைத்திருந்தார்.இந்த வழக்கின் தீர்ப்புரையில், தில்லி கூடுதல்தலைமை பெருநகர நீதிமன்றத்தில் நடுவர் ரவீந்த்ரா பாந்தே கூறியிருப்பதாவது: “பாலியல் துஷ்பிரயோகம் கண்ணியத்தையும் தன்னம்பிக்கையையும் பறித்துவிடுகிறது. கண்ணியத்திற்கான உரிமையைக் காவு கொடுத்து, நற்பெயருக்கான உரிமையைப் பாதுகாத்திட முடியாது. பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகள் 1994-ஐச் சேர்ந்த போதிலும்கூட, ஒரு பெண்மணி தனக்கேற்பட்ட குறைகளை, எப்போது வேண்டுமானாலும் கூறலாம்.”இதுதொடர்பாக தில்லி பத்திரிகையாளர் சங்கத்தின் பாலின சமத்துவக் கவுன்சில், “தீர்ப்புரையில்இதுபோன்று கருத்துக்கள் கூறியிருப்பது, பாலியல்சீண்டல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் ஒரு மதிப்புமிக்க முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்புரை, பெண்கள் இயக்கத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி” என்றும் கூறியிருக்கிறது.               (ந.நி.)

;