india

img

விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமாகிறது..... மகாபஞ்சாயத்துகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு.... வெகுஜன அமைப்புகளை அணிதிரட்ட முடிவு....

புதுதில்லி:
நாடு தழுவிய சாலை முற்றுகையின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் உட்படபிற வெகுஜன அமைப்புகளை அணிதிரட்டு வதே திட்டம். கிளர்ச்சியை வழிநடத்தும் கூட்டமைப்பான கிசான் மோர்ச்சா எதிர்கால போராட்டங்கள் குறித்து முடிவு செய்யும்.

சாலை முற்றுகை பெரும் வெற்றி பெற்றதாக கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாய அமைப்புகள் இன்னும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளன. இருப்பினும், ஒரு புதிய திட்டத்தை முன்வைக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளுக்கு சட்டங்களை முடக்கும் திட்டத்திற்குஉடன்படவில்லை என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலைக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட புதியதிட்டங்கள் தேவை. மூன்று சட்டங்களை வாபஸ் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று கிசான் மோர்ச்சா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மோடி அரசுக்கு எதிரான பொதுமக்களின் உணர்வு வலுவடைந்து வருகிறது என்பதே விவசாயிகள் அமைப்புகளின் கருத்து. சாலை முற்றுகை போராட்டத்தில் வெகுஜன பங்கேற்பு இதற்கு சான்றாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. உ.பி. மற்றும்ஹரியானாவில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மகா பஞ்சாயத்துகளில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த போராட்டம் மோடிக்கு எதிரான பொதுக் கூக்குரலாக மாறும் என்று சங் பரிவார் அமைப்புகளும் வருத்த மடைந்துள்ளன.  விவசாயிகளின் போராட்டம்சர்வதேச அளவில் விவாதிக்கப்படுவ தாகவும் அவர்கள் அஞ்சுகிறார்கள். 

;