india

img

மார்ச் 26-ல் வேலைநிறுத்தம் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு....

புதுதில்லி:
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுதில்லியில்கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தியடிராக்டர் பேரணியில் பாஜக திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன்மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ஆம் தேதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம்நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்
போவதாக விவசாய சங்கங்கள் வியாழனன்று அறிவித்தன. அத்துடன், வரும் 15-ஆம் தேதியன்று பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கங்களும் தில்லியில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

;