india

img

ஸ்டான் சுவாமி மரணம் அரசே நடத்திய படுகொலை.. எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு....

மும்பை:
“மனித உரிமைப் போராளி ஸ்டான் சுவாமியின் மரணம், இயற்கையானது அல்ல; அரசே நடத்தியபடுகொலை!” என்று, ஸ்டான் சுவாமியுடன் சேர்த்து எல்கர் பரிஷத் வழக் கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும் பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கில் போராளிஸ்டான் சுவாமி, எழுத்தாளர் வரவரராவ், ஹேனி பாபு, மகேஷ் ராவத்,வழக்கறிஞர்கள் சுரேந்திர கட்லிங், சுதா பரத்வாஜ், முன்னாள் பேராசிரியர் சோமா சென், சாகர் கோர்கே, ரமேஷ், ஜோதி ஜகதீப், அருண் பெர்ரேய்ரா, வெர்னோன் கோன்சல் வெஸ், ரோனா வில்சன் மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் அடுத்தடுத்துகைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில், மும்பை டலோஜா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த84 வயது ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் என்ற நடுக்குவாத நோயால் பாதிக் கப்பட்டிருந்த நிலையில், உணவு எடுத்துக் கொள்வதற்கான உறிஞ்சு குழாயோ, குவளையோ கூட வழங்கப்படாமல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவருக்கு மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. மனித உரிமை ஆணையம்,மும்பை உயர் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே மிகத் தாமதமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அதற்குள்ளாகவே உடல்நிலை மோசமடைந்த ஸ்டான் சுவாமி திங்களன்று உயிரிழந்தார்.

இது நாடு முழுவதும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஐக்கியநாடுகள் அவை ஸ்டான் சுவாமிமறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளநிலையில், சுவாமியின் மரணம் தொடர் பாக விசாரணை நடத்தப்பட வேண் டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின்முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 10 பேர் கூட்டாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.இந்நிலையில்தான், எல்கர் பரிஷத் வழக்கில் கைதானவர்களின், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

“பாதிரியார் ஸ்டான் சுவாமி உயிரிழந்த சம்பவம் பற்றி அறிந்து அவரதுகுடும்பத்தாரும் நண்பர்களும் மிகவும் துடித்துப் போய் இருக்கிறோம். இது இயற்கையான மரணம் கிடையாது. இது ஒரு புனிதமான ஆத்மாமீது நடத்தப்பட்ட நிறுவனக் கொலை(Institutional Murder). இதை நிகழ்த்தியது அரசு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட தனது வாழ்க்கை முழுவதையும் பழங்குடியினர் உடன் கழித்தவர் ஸ்டான் சுவாமி. அவர்களது நியாயமான உரிமைகளுக்காகவும் அந்த நிலத்தில் அவர்களின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடிய ஸ்டான் சுவாமி இப்படியொரு மரணத்தைத் தழுவியிருக்கக்கூடாது. பழிவாங்கும் நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.ஸ்டான் சுவாமியின் மோசமானதனது உடல்நிலை பற்றி தெரிந்திருந் தும் அவர் தனக்காக மட்டும் வாதாடவில்லை. சிறைச்சாலையில் இவரைப்போல பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சிறையில் உள்ளஒவ்வொருவருக்கும் தனது திடமானமனதால் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சிறையில் அடைக் கப்பட்டிருந்த சக கைதிகளுக்காக அவரது மனம் எப்போதும் இயங்கிக்கொண்டிருந்தது.பல சிறைக்கைதிகள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருவதாக தனது கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.அத்தகைய ஸ்டான் சுவாமிமரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும்அதே நேரத்தில், சிறை நிர்வாகத்தின்மெத்தனம், நீதிமன்றங்களில் மாறுபட்ட உத்தரவுகள், மோசடியான விசாரணை அமைப்புகள் ஆகியவைதான் ஸ்டான் சுவாமி மரணத்துக்கு காரணம் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;