india

img

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்த்த விவகாரம்.... மக்களை சட்டவிரோதமாக கண்காணித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை.... இரு அவைகளையும் ஒத்திவைத்தது மோடி அரசு....

புதுதில்லி:
இந்தியாவில் பத்திரிகை யாளர்கள், எதிர்க்கட்சித் தலை வர்கள், நீதிபதிகள் என பல்வேறு தரப்பினரையும்  இஸ்ரேல் நாட்டின் வேவு மென்பொருள் பெகாசஸ் மூலம் ஒன்றிய அரசு உளவு பார்த்ததாக தி வயர் உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் நாட்டு மக்களை சட்ட விரோதமாக கண்காணித்தது குறித்து  மோடி அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள் ளன. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜூலை 20 அன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடியதுமே எதிர்க்கட்சி எம்பிக்கள் உளவு பார்த்த விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், கௌரவ் கோகாய் ஆகியோர் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானங்களை சபாநாயகரிடம் கொடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும்  துறை அமைச்சர் அறிக்கை விடுவதற்கு முன்னர் விவாதம் நடத்த வேண்டும் என்றும்  எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். ஆனால் விவாதம் நடத்த அனுமதியளிக்கப்படாமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

;