india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதி... 

ஜார்க்கண்ட் பழங் குடி மக்களுக்காக 30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் பாதிரியார் ஸ்டான் சுவாமி, எல்கர் பரிஷத் - பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவின் டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை ‘ஹோலி பேமிலி’ தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க மும்பை உயர் நீதிமன்றம் 15 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

                         ******************

அமைச்சர் ஹர்ஷ வர்தன் விரைவில் மாற்றம்?

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஹர்ஷ வர்தன் விரைவில் பதவி விலக உள்ளதாகவும், அவருக்குப் பதில் கர்நாடகத்தைச் சேர்ந்த டாக்டர் தேவிஷெட்டி என்ற தனியார் மருத்துவ நிறுவனங்களின் முதலாளி, சுகாதாரத்துறை அமைச்சராக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்தா சோனாவால், சுஷில் மோடி, மீனாட்சி லேகி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

                         ******************

கும்பமேளா: எண்ணிக்கையை குறைத்தது உத்தரகண்ட் அரசு

30 நாட்கள் நடைபெற்ற ஹரித்துவார் கும்பமேளாவில் சுமார் 49 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக உத்தரகண்ட் பாஜக அரசு முன்பு தெரிவித்திருந்தது. இதனிடையே, கும்பமேளாதான் கொரோனா 2-ஆவதுஅலை தீவிரத்திற்கு காரணம் என்றுஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத் தமே 21 லட்சம் பேர்தான் நீராடினார்கள் என்று காவல் ஆய்வாளர் சஞ்சய் குன்ஜியல் மூலம் நீதிமன்றத்தில் பல்டி அடித் துள்ளது.

                         ******************

ஹனுமன் பிறந்த இடம் பற்றி முடிவுக்கு வந்தாக வேண்டும்!

திருமலையில்தான் ஹனுமன் பிறந்தார் என திருப்பதி தேவஸ் தானம் அறிவித்துள்ள நிலையில், இதனை ஏற்க முடியாது என்றுஹம்பி ஹனுமத் ஜன்மபூமி அறக்கட்டளையின் நிறுவனர் கோவிந்தானந்த சரஸ்வதிகூறியுள்ளார். இந்த விஷயத்தில் அனைத்து பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஜீயர்கள் உடனடியாக விவாதித்து ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என்றும் அவர் அவசரம் காட்டியுள்ளார்.

                         ******************

பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித்தொகை 15% உயர்வு!

உறுதியளித்தபடி உதவித்தொகையை உயர்த்தாததால், தெலுங்கானா மாநில மூத்த பயிற்சி மருத்துவர்கள் மே 26 முதல் தங்களின் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அவர்களின் சம்பளத் தொகையை மாதம் ஒன்றிற்கு ரூ. 70 ஆயிரத்தில் இருந்து ரூ. 80 ஆயிரத்து 500 ஆக, 15 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி- அதனை முன்தேதியிட்டு 2021 ஜனவரி முதல் அமல்படுத்த முதல்வர்  சந்திரசேகர ராவ்உத்தரவிட்டுள்ளார். 

;