india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வழக்கு, போராட்டத்தால் பின்வாங்கினார் ராம்தேவ்

மருத்துவர்களின் வழக்கு, போராட்ட அறிவிப்புகளால், நவீன அறிவியல் மருத்துவத்திற்கு (அலோபதி) எதிரான கருத்துகளை திரும்பப் பெறுமாறு, கார்ப்பரேட் சாமியார்ராம்தேவிற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, ‘நான் என்னுடைய முரண்பட்ட கருத்துக்களை திரும்பப் பெற்று, இந்த சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைக்கிறேன். என்னுடைய கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன்’ என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

                                           ****************

மோடி படம் நீக்கப்பட்டு முதல்வர்கள் படம்...

மத்திய அரசானது, தடுப்பூசி வழங்கும் பொறுப்பை, மாநில அரசுகளின் தலையில் சுமத்தியதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப் படும் தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை நீக்கியுள்ளது. அந்த இடத்தில் முதல்வர் பூபேஷ் பாகேலின் படத்தை பொறித்துள்ளது. ஏற்கெனவே ஜார்க்கண்டிலும் மோடி படம் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

                                           ****************

சுவேந்து குடும்பத்திற்கே ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு!

மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ-க்கள் 77 பேருக்கும் பல்வேறு பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தாவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு ‘ஒய் பிளஸ்’(Y+) பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடவே சுவேந்துவின் தந்தை சிசிர் அதிகாரி, சகோதரர் திப்யேந்து ஆகியோருக்கும் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

                                           ****************

நான் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவில்லை!

மகாராஷ்டிரத்தில் ‘டவ்-தே’ புயல் பாதிப்புகளை மாநிலமுதல்வா் உத்தவ்தாக்கரே வெள்ளிக் கிழமை நேரில் சென்றுஆய்வு செய்தார். இதனை விமர்சித்த பாஜக தலைவர்கள், 3 மணி நேரஆய்வில் எப்படி பாதிப்பை தெரிந்துகொள்ள முடியும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலடி கொடுத்துள்ள உத்தவ் தாக்கரே, ‘நான் நேரில் சென்றேன்... புகைப்படங்களுக்காக ஹெலிகாப்டரில் செல்லவில்லை’ என்று மறைமுகமாக பிரதமர் மோடியை குத்திக் காட்டியுள்ளார்.

                                           ****************

பாஜகவில் சேர்ந்து தவறு செய்து விட்டேன்

‘மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னித்தால் தான் நான் உயிருடன் இருப்பேன்’ என, பாஜகவுக்குத் தாவிய முன்னாள் திரிணாமுல் எம்எல்ஏ சோனாலி குஹா கடிதம் எழுதியுள்ளார். ‘உணர்ச்சிவயப்பட்டு பாஜக-வில் சேர்ந்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. மீனால் தண்ணீரை விட்டு வெளியே இருக்க முடியாதது போல, நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது’ என்று அவர் கூறியுள்ளார்.

;