india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

கடவுள் நம்பிக்கை பெயரில் ஒரு ஊழல்!

“2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஐந்தே நிமிடத்தில் ரூ. 18.5 கோடி கொடுத்து வாங்கியதற்கு- விலை ஏறி விட்டதே காரணம் என்று ராமர் கோயில் அறக்கட்டளை கூறுகிறது.. யாராவது நம்ப முடிகிறதா..? அந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ. 5 கோடிதான்... மேலும், 2 பத்திர பதிவுகளிலும் ஒரே நபர்களே சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர். எப்படியோ கடவுள் நம்பிக்கையை வைத்து ஒரு ஊழலை அரங்கேற்றியுள்ளனர்” என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

                                 **************

பாதுகாப்பை திரும்பப்  பெற்ற ஒன்றிய அரசு!

முகுல் ராய் பாஜக வில் இருந்தபோது, ஒன்றிய பாஜக அரசுஅவருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கியிருந் தது. இதனிடையே, முகுல் ராய் பாஜகவில்இருந்து வெளியேறி சில நாட்களுக்கு முன், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த மத்தியப் படை பாதுகாப்பை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தற்போது திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

                                 **************

எதற்கும் அஞ்சாத   சிங்கக்குட்டி நான்...

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், “நான் ராம் விலாஸ் பஸ்வான் என்ற சிங்கத்தினுடைய மகன். எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன். அனைத்தையும் சட்ட ரீதியாகஎதிர்கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார். “என்னிடம் கேட்டிருந்தாலே, பசுபதி குமார் பராஸை கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆக்கியிருப்பேன்” என்றும் சிராக் குறிப்பிட் டுள்ளார்.

                                 **************

சமாஜ்வாதி கட்சி இரண்டு துண்டாகும்!

“பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் சிலர் சமாஜ்வாதி கட்சியில் இணையப்போவதாக அக்கட்சி திட்டமிட்டு தகவல் பரப்பி வருகிறது. ஆனாலும் இப்போதுவரை அவர் களைச் சேர்க்காமல் தவிக்க விட்டு வருகிறது. பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்களைசேர்த்தால் தங்கள் கட்சி பிளவுபட்டு விடும் என்று சமாஜ்வாதி கட்சிக்கு நன்றாகவே தெரியும்” என்று உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                                 **************

கோவாக்சின் தடுப்பூசியில்  பசுங்கன்றின் ‘சீரம்’ இல்லை!

பிறந்து 20 நாட் களே ஆன பசுக்கன்றுகளை வெட்டி அதில் இருந்து வெளியேறும் ரத்தம் உறைந்த பின் னர் எடுக்கப்படுவதை ‘சீரம்’ என்கின்றனர். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்தில் இந்த ‘சீரம்’ கலக்கப்படுவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பதி என்பவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், “பிறந்த பசுவின் சீரம் என்பது வெரோ செல்களின் உற்பத்தியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இறுதி தடுப்பூசி உருவாக்கத்தில் கன்று சீரம் பயன்படுத்தப்படுவதில்லை” என்று ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

;