india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

அரசுப் பணிகளுக்கு  நேர்முகத்தேர்வு இல்லை!

“ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத் துத் தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது” என்று அம்மாநில ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிவித்துள்ளது. தேர்வு நடைமுறையின் மீதான வெளிப் படைத் தன்மையைப் பேணுவதற்கும், நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

                       ****************

பெட்ரோல் - டீசல் பெயரில் பாஜக அரசு கொள்ளை!

“2013-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை101 டாலராக இருந்தது.அப்போது பெட்ரோல் ரூ. 66-க்கும் டீசல் ரூ.51-க்கும் கிடைத்தது. ஆனால், 2020 ஏப்ரலில்கச்சா எண்ணெய் 19 டாலராக இருந்தும் அதன் பலனை மோடிஅரசு மக்களுக்கு அளிக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 21.5லட்சம் கோடி ரூபாயை பெட்ரோலியப் பொருட்களில் இருந்து வரியாக கொள்ளையடித்துள்ளது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திசாடியுள்ளார்.

                       ****************

உ.பி., உத்தரகண்டில் தனித்தே போட்டி!

உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, ஓவைசி-யின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி சேரவுள்ளதாக வெளியான செய்தியை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மறுத்துள் ளார். “பஞ்சாப் தேர்தலுக்காக சிரோமணி அகாலிதளத்துடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கூட்டணி இல்லை. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாகவே போட்டியிடும்” என்று அவர் அறிவித்துள்ளார்.

                       ****************

தடுப்பூசி விவகாரத்தில் பொய் சொன்ன மோடி அரசு!

‘‘ஆகஸ்ட் மாதத்திற்குள் 135 கோடி தடுப்பூசிடோஸ்களை ஏற்பாடு செய்து விடுவோம் என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால்,மே 28 அன்று, டிசம்பருக்குள் 213 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்குவோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜவடேகர் கூறியிருந்தார். தற்போதுஒன்றிய அரசு 213 கோடி தடுப்பூசி டோஸ்களில் இருந்து 135 டோஸ்களுக்கு இறங்கிவந்துள்ளது. அவர்களின் பொய் வெளிப்பட்டுள்ளது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி விமர்சித்துள்ளார்.

                       ****************

அரசியலை விட்டே  விலகத் தயார்..!

“மகாராஷ்டிரா மாநிலத்தில், எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்கினால், மூன்று அல்லது நான்கு மாதங்களில், ஓ.பி.சி., இட ஒதுக் கீட்டை அமல்படுத்துவோம். உள்ளாட்சித் தேர்தலிலும் இதை நடைமுறைப்படுத்துவோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அரசியலில் இருந்தே நான் விலகி விடுகிறேன்” என்று பாஜக-வைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்துள்ளார். 

;