india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

சரத்பவாருடன், ராகுல் கைகோர்க்க வேண்டும்!

“சரத் பவாரால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றி ணைக்க முடியும். அனைத்துக் கட்சிகளை ஒரேகுடையின் கீழ் கொண்டுவர காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் கைகோர்க்க வேண்டும்”  என்று சிவசேனா-வின் சாம்னா பத்திரிகை தலையங்கம் தீட்டியுள்ளது. “எதிர்க்கட்சி தலைவர்களின் தேநீர் விருந்து ராகுல்காந்தியால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவேண்டும்” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

                             **************

370-ஆவது பிரிவை மீட்டே தீருவோம்!

“370-ஆவது பிரிவுகாஷ்மீரின் அடையா ளம். ஜவஹர்லால் நேருமற்றும் சர்தார் படேலால் எங்களுக்கு கிடைத்தது. அது ரத்தானதால் காஷ்மீர் மக்கள் கோபமாகவும், வருத்தமாகவும், உணர்ச்சிவசப்பட்டும் உள்ளனர். அவமானமாகவும் உணர்கிறார்கள்” என்று பிடிபி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார். “மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும்... காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நாங்கள்மீட்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.

                             **************

வண்டி குதிரையைஇழுக்காது..!

“குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். ஜம்மு - காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதன்பிறகு தேர்தல் நடத்த வேண்டும். மாநிலம்தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும். ஒன்றிய அரசோ முதலில்தேர்தல் நடத்த முயலுகிறது. ஆனால் வண்டியால் குதிரையை இழுக்க முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்,ஒன்றிய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                             **************

கொரோனா விதிமீறலுக்கு இறங்கிய புகார் மனு!

பிரபுல் ஹோடாபடேலை விமர்சித்ததற் காக திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக குற்றச்சாட்டு அளவிற்குப் போன லட்சத்தீவு நிர்வாகம், தற்போது கொரோனா வழிகாட்டு அறிவுறுத்தல்களை ஆயிஷா சுல்தானா பின்பற்றவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில்  அற்பமான புகார் ஒன்றை வைத்துள்ளது. முன்ஜாமீனை ஆயிஷா துஷ்பிரயோகம் செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

                             **************

அம்ரீந்தர் சிங் மீண்டும்  முதல்வர் வேட்பாளர்..!

பஞ்சாப் சட்டப்பேர வைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அம்ரீந்தர் சிங், முன்னாள் அமைச்சர் சித்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரிடம் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனைகளை நடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து, “பஞ்சாப் முதல்வர் பதவியில் அம்ரீந்தர் சிங் நீடிப்பார். அதிருப்தியாளர்களின் குறைகளைபோக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று காங்கிரஸ் அறி வித்துள்ளது.

;