india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்..

‘லவ் ஜிகாத்’ சட்டத்தில் குஜராத் இளைஞர் கைது!

‘லவ் ஜிகாத்’தை தடுக்கிறோம் என்ற பெயரில் ‘மதச் சுதந் திர சட்டம் - 2021’-ஐ கொண்டுவந்த குஜராத் அரசு, இச்சட்டத் தில் முதல் நபராக சமீர் குரேஷி என்ற 26 வயதுமுஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட் டுள்ளார். வதோதரா நகரைச் சேர்ந்தசமீர் குரேஷி முகநூலில் கிறிஸ்தவர் என்ற அறிமுகத்துடன் பெண் ஒருவருடன் பழகி திருமணம் செய்து கொண்டதுடன், தற்போது அந்தப் பெண்ணை மதம்மாறச் சொல்லி துன்புறுத்துவதாக கூறி இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

                                                            *****************

75 ஆயிரம் உயிரிழப்புகளை மறைத்ததா பீகார் அரசு?

பீகாரில் கடந்த 2019 ஜனவரி முதல் மேமாதம் வரை 1.3 லட்சம்பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், 2021-ஆம்ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.2 லட்சம்பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82 ஆயிரத்து 500 அதிகம் என்றநிலையில், இதற்கு கொரோனா பாதிப்பேகாரணமாக இருக்கக் கூடும்; ஆனால், பீகார் அரசு அதை மறைக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீகார் அரசோ 7 ஆயிரம் மரணங்களை மட் டுமே கணக்கில் சேர்த்துள்ளது.

                                                            *****************

பாஜக எம்எல்ஏவுக்கு அபராதம்; எஸ்.ஐ. இடமாற்றம்!

உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி தொகுதி பாஜக எம்எல்ஏ பிரதீப் பத்ரா, ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியுள் ளார். ஆனால், எம்எல்ஏ என்பதை அறியாத போலீசார் பத்ராவுக்கு அபராதம் விதித்துள்ளனர். அவரும் போலீசார் முகத்தில்அபராதத்தை விட்டெறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே, எம்எல்ஏவுக்கு அபராதம் விதித்த காவல் உதவிஆய்வாளர் நீரக் காதெய்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

                                                            *****************

ஆபத்தான பாதையில் நாடு பயணிக்கிறது!

“சமூக பதற்றம் என்பது கடுமையான சொல்லாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நம் நாடு சமூக அமைதியின்மையை நோக்கி பயணிக்கிறது. கட்சிகள் மக்கள் பிரச்சனையை தீர்க்க ஆட்சிக்கு வர வேண்டுமா,அல்லது அதிகாரத்துக்காக மட்டுமே ஆட்சிக்கு வர வேண்டுமா? என முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

                                                            *****************

உ.பி. பாஜக துணைத் தலைவரான ஏ.கே. சர்மா!

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்திற்கு மாற்றாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. சர்மாவை முன் னிறுத்த பிரதமர் மோடி - அமித்ஷா கூட் டணி முடிவு செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் தலையிட்டு ஆதித்யநாத்தையே மீண்டும் முதல்வராக வேட்பாளராக அறிவிக்க வைத்தது.இது மோடி - அமித்ஷா ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது ஏ.கே. சர்மாவுக்கு உ.பி. மாநில பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

;