india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் ரத்து!

கொரோனா தொற்று காரணமாக, உள்நாட்டு மக்கள் மட் டுமே இந்த ஆண்டு ‘ஹஜ்’ யாத்திரையில் கலந்துகொள்ளலாம் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ள பின்னணியில் இந்தியாவில்  ஹஜ் யாத்திரைக்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்திய ஹஜ் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மக்ஸூத் அகமது கான் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ஹஜ் பயணத்துக்கு இந்தியாவில் இருந்து யாரும்அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                               ****************

காங்கிரஸ், பிஎஸ்பியுடன் கூட்டணி கிடையாது!

2022-இல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சிறியகட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ்கட்சிகளுடன் கூட்டணிவைக்கப் போவதில்லை என்று சமாஜ் வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். உ.பி. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டத் தயாராகி விட்டனர் என்றும் அகிலேஷ் கூறியுள்ளார்.

                               ****************

5 ஆண்டுகளுக்கும் உத்தவ்தான் முதல்வர்!

“மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் தொடர்ந்து பணியாற்றுவோம்; அதில் எந்த சந்தேகமும் வேண் டாம்” என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான அஜித்பவார் தெரிவித்துள்ளார். “இனிவரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்” என்று கூட்டணியிலுள்ள காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியிருந்த நிலையில்,“அது அவரது ஆசை” என்றும் பவார் பதிலளித்துள்ளார்.

                               ****************

தேர்தல் வேலைகளை ‘துவக்கிய’ அகாலிதளம்!

பஞ்சாப்பின் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்த கையோடு, செவ்வாயன்று முதல் வர் அம்ரீந்தர் சிங் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளது. கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடத்திருப்பதாக கூறி இந்த போராட்டத்தை நடத்தியுள் ளது. கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கைதாகியுள்ளார்.

                               ****************

30 தொண்டர்களை கொன்று விட்டார்கள்...

“மேற்குவங்கத் தில் தேர்தலுக்குப் பிந் தைய ஒன்றரை மாதத் தில் மட்டும் பாஜகவைச் சேர்ந்த 30 முதல் 32 பேர் கொலை செய்யப்பட் டுள்ளனர். அரசியல் எதிர்த் தரப்பினரை குறிவைத்து, திரிணாமுல் வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது. புயல் நிவாரணம்கூட பாஜக தொண்டர்களுக்கு வழங்கப்படுவது இல்லை; பாரபட்சம் காட்டப்படுகிறது” என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

;