india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

கோழையைப் போல் செயல்படுகிறார் பிரதமர்!

“பிரதமர் மோடி ஒரு கோழையைப் போல் செயல்படுகிறார். அவர் நாட்டை வீழ்ச்சியடைய செய்துவிட்டார். நல்லாட்சி என்பது நெருக்கடி நிலையை எதிர்கொள் வது. பொறுப்பை உணர்ந்து நடவடிக்கைஎடுப்பது. ஆனால், மோடி அரசு தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, உண்மையை மறைக்கவும் பொறுப்பைத் தட்டி கழிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திகூறியுள்ளார்.

                                  ****************

கொரோனா ஆய்வகங்களை விசாரிக்கும் பாஜக அரசு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாதான் கொரோனா2-ஆவது அலைக்கு காரணம் என பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு குறித்த போலியான பரிசோதனைச் சான்றுகள் அளித்ததே காரணம் எனகுற்றம்சாட்டி, இதுதொடர்பாக,24 தனியார் ஆய்வகங்களிடம் விசாரணை நடத்த மாநில பாஜக அரசு முடிவுசெய்துள்ளது.

                                  ****************

கிஷோர் இல்லாமலேயே நாங்கள் ஜெயித்தோம்..

இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம் தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர் பதவிக்காக பாஜக-காரராகவே மாறிப்போனார். சரத்பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பற்றி பாஜக-வே வாய் திறக்காத நிலையில், “2019 மக்களவைத் தேர்தலில் கிஷோரின் துணையின்றிதான் பாஜக தனிப் பெரும் கட்சியாக 304 இடங்களில் வெற்றி பெற்றது” என்று சம்மன் இல்லாமல் ஆஜராகி உள்ளார். 2019 தேர்தலில் அத்வாலேவுக்கு ஒரு இடம்கூட பாஜக தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                                  ****************

மகாராஷ்டிராவில் இனி நாங்கள் தனித்தே போட்டி!

“மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், இனி வரும் அத்தனை தேர்தல்களிலும் காங்கிரஸ்தனித்தே போட்டியிடும்; காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் மீண்டும் தனித்தே ஆட்சி அமைக்கும்”என கூறியுள்ளார். இதனை என்சிபி தலைவர் நவாப் மாலிக், ‘நானோ படோல் மாநில முதல்வராக ஆசைப்படுகிறார்’ என்று கிண்டலடித்துள்ளார். எனினும் மகாவிகாஸ் அகாதி கூட்டணி தொடர்வதுபற்றி முடிவுசெய்யப்படவில்லை எனமாலிக்கும் குறிப்பிட்டுள்ளார்.

                                  ****************

பாஜக தலைவர்கள் 15 பேர் ராஜினாமா!

லட்சத்தீவில் கொரோனாவைப் பரப் பும், ஒரு உயிரி ஆயுதமாக பிரபுல் படேல் ஏவிவிடப்பட்டுள்ளார் என்று திரைப்பட பெண் இயக் குநர் ஆயிஷா சுல் தானா சாடியிருந்தார். இதற்காக அவர் மீது மோடி அரசு தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், ஆயிஷா மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லட்சத்தீவு பாஜகபொதுச் செயலாளர் அப்துல் ஹமீது முள்ளிப்புழா உள்ளிட்ட 15 பாஜக தலைவர்கள் தங்களின் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

;