india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மக்களவை தேர்தலிலும் சிவசேனாவுடன் கூட்டணி

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசியலில் மாற்றங்கள் வரலாம் என்று கூறப்பட்ட நிலையில், ‘சிவசேனா - என்சிபி- காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யும்’ என என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ‘அடுத்த மக்களவைத் தேர்தல், சட்டசபைத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி சிறப்பாக செயல்படும்’ என்று கூறியுள்ளார்.

                                        ****************** 

சிறுபான்மையினர் மீது பழிபோடும் பாஜக முதல்வர்

மக்கள் தொகை பெருக்கத்திற்கு சிறுபான்மையினரே கார ணம் என்பதுபோல, ‘கண்ணியமான குடும்பக் கட்டுப்பா ட்டுக் கொள்கையைச் சிறுபான்மை சமூகமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றுஅசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியுள்ளார். ‘இந்த விஷயத்தில் சிறுபான்மை சமூகத் தலைவர்கள் தலையிட்டுப் பொதுமக்களிடையே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேச வேண்டும்’ என்றும் பிஸ்வா முடிச்சவிழ்த்துள்ளார்.

                                        ****************** 

மோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே அடுத்த இலக்கு!

‘மாநிலங்களை புறக்கணிப்பது கூட்டா ட்சி அமைப்புக்கு நல்லதல்ல! ஆனால், மாநிலங்களுக்கு எதிராக எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பிரித்தாள வேண்டும் என்பதெல்லாம் மோடிக்கு மட்டுமே தெரிந்த கலை. மோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே எனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையாக இருக்கும்’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

                                        ****************** 

நான் சொன்னது காட்டுப்புலி; கூண்டுப் புலியை அல்ல!

‘புலிகளுடன் நாங்கள் எப்போதுமே நண்பர்களாக இருப்போம்’ என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருந்த நிலையில், பாஜக மீண்டும் சிவசேனாவுடன் (சிவசேனா வின் சின்னம் புலி) கூட்டணி சேர விரும்புவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நாங்கள் காட்டில் இருக்கும் புலிகளுடன்தான் நட்பாக இருக்க விரும்புவோம். கூண்டுப் புலியுடன் அல்ல! என்று பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.

                                        ****************** 

பாஜக அரசின் ஊழல்களே நஷ்டத்திற்கு காரணம்..!

கர்நாடக அரசின் மின் கட்டண உயர்வு முடிவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கண்ட னம் தெரிவித்துள் ளார். மின் விநியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதற்கு பாஜக அரசின்ஊழல்களே காரணம் என்று கூறியுள்ள சித்தராமையா, ‘10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவை என்ற நிலையில், 30 மெகாவாட்டை கொள்முதல் செய்வது ஏன்?’ என்றும் முதல்வர் எடியூரப்பாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

;