india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

ஸ்டான் ஸ்வாமிக்கு  கொரோனா தொற்று

எல்கர் பரிஷத் - பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப் பட்டு மும்பை டலோஜா சிறையில் அடைக்கப் பட்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமிக்கு(84) உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரை ‘ஹோலி பேமிலி’ என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச் சையளிக்க மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே 15 நாள் அனுமதி வழங்கிஇருந்தது. இந்நிலையில், அங்கு நடைபெற்ற பரிசோதனையில் சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

                               ***************

மம்தாவின் ஆலோசகரான அலபன் பண்டோபாத்யாயா

மேற்குவங்க முதல் வர் மம்தாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான மோதலின் பின்னணியில், தலைமைச் செயலாளர் அலபன் பண்டோபாத்யாயா, மத்தியஅரசுப் பணிக்கு அழைக்கப்பட்டிருந் தார். ஆனால், மம்தா அவரை அனுப்பமறுத்து விட்டார். மேலும், பண்டோபாத்யாயா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அவரை தனது தலைமை ஆலோசகராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.

                               ***************

தெலுங்கு நடிகர்களின் இலவச தடுப்பூசி முகாம்

தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு நடிகர் சிரஞ்சீவி இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்பாடு செய்துதந்தார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபுவும், தனது தந்தை நடிகர்கிருஷ்ணாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி, புர்ரே பாலெம் கிராம மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியுள்ளார்.

                               ***************

அதிகம் பிடிபட்ட  500 ரூபாய் கள்ள நோட்டு!

கடந்த ஆண்டைக் காட்டிலும், 2020-21 நிதியாண்டில், 500 ரூபாய்கள்ள நோட்டுக்கள் 31.3 சதவிகிதம் அதிகமாக பிடிபட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவதுபிரதமர் மோடி புதிதாக அறிமுகப்படுத் திய 500 ரூபாயைப் போன்ற போலி நோட்டுக்கள் 39 ஆயிரத்து 453 என்ற எண்ணிக்கையிலும், 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் 1 லட்சத்து 11 ஆயிரம் என்றஎண்ணிக்கையிலும் சிக்கியுள்ளன.

                               ***************

ஆனந்தய்யா லேகியத்திற்கு ஆந்திரா அரசு ஒப்புதல்!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டி னத்தை அடுத்த மூலக்கூறு கிராமத்தில் வசிப்பவர் போகினி ஆனந்தய்யா. கொரோனா நோயாளிகளுக்கு 6 மூலிகைகளைக் கொண்டு இவர் தயாரித்து வழங்கிய நாட்டு மருந்துநல்ல பலன் அளிப்பதாக கூறப்படும் நிலையில், அதனை தொடர்ந்து வழங்க ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் கண்ணுக்கான சொட்டு மருந்து வழங்குவதற்கு மட்டும் தடை விதித்துள்ளது.

;