india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மேற்குவங்க சான்றிதழிலும் மோடி படம் நீக்கம்!

18 வயதுக்கு மேற் பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான செலவை, தங்கள் மீது சுமத்திய நிலையில், தடுப்பூசி சான்றிதழில் இருக்கும் பிரதமர் மோடியின் படத்தை மாநில அரசுகள் ஒவ்வொன்றாக நீக்கி வருகின்றன. ஏற்கெனவே, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப்அரசுகள் மோடி படத்தை நீக்கியிருந்த நிலையில், தற்போது மேற்குவங்க அரசும் மோடியின் படத்தை தடுப்பூசி சான்றிதழிலிருந்து அகற்றியுள்ளது.

                                *****************

மகாராஷ்டிராவில்  தியேட்டர்கள் திறப்பு

கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது பாதிப்புகட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல் தொற்று பாதிப்பு 5 சதவிகிதத்திற்கு கீழுள்ள பகுதிகளில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சலூன்கள், உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கவும், புறநகர் ரயில்கள்இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள் ளது.

                                *****************

மகாநதியை இணைத்துவிட்டு கோதாவரிக்கு வாருங்கள்

தெலுங்கானா மாநிலம், இச்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தின் கல்லணை வரை யிலான 1,211 கி.மீ. தொலைவு கொண்ட, கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத் திற்கு தேசிய நதிநீர் மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், மகாநதி - கோதாவரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்துங்கள். அதன்பிறகு கோதாவரி – காவிரி இணைப்பைச்செய்யலாம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

                                *****************

சாயோனி கோஷூக்கு பதவி வழங்கிய மம்தா!

திரிணாமுல் காங்கிரசின் இளைஞர் அணித் தலைவராகநடிகை சாயோனிகோஷ் நியமிக்கப் பட்டு உள்ளார். இதேபோல திரிணாமுல் பொதுச் செயலாளராகமம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி,கலாசாரப் பிரிவு தலைவராக முன்னாள்திரைப்பட இயக்குநர் ராஜ் சக்ரபோர்த்தி, மாநில பொதுச் செயலாளராக குணால் கோஷ், விவசாய அணி தலைவராக புர்னேந்து போஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

                                *****************

நீதிபதி மீது காலணியை வீசியவருக்கு 18 மாதச் சிறை!

ராஜ்கோட் மாவட்டம், பாயாவதர் பகுதியை சேர்ந்தவர் பவானிதாஸ். டீக் கடைக்காரரான இவர், தனது கடை தொடர் பான வழக்கு நீண்ட காலமாக விசாரணைக்கு வராததால் விரக்தியடைந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிபதி கே.எஸ். ஜாவேரி மீது காலணிகளை வீசினார். இந்த வழக்கில் தற்போதுபவானிதாஸூக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;