india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

இலவச தடுப்பூசி கேட்க உரிமை இருக்கிறது...

‘நாடு முன்னெப் போதும் சந்தித்திராத சுகாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக கோருவதற்கு உரிமை உள்ளது. அதனை மத்திய அரசு மறுப்பது முற்றிலும் அநியாயமானது. மோடி அரசின் திறமையின்மை மற்றும் உணர்வற்ற தன்மைக்கு எதிராக, நாட்டு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்றுராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்வலியுறுத்தியுள்ளார்.

                                      ******************

‘ஷோலே’ பட வசனம் பேசிய மம்தா பானர்ஜி

‘அஞ்சுவோருக் குத் தான் மரணம்.. அச்சம் அடைபவர்கள் மரணிப்பது உறுதி..’ என்று ‘ஷோலே’ திரைப் படத்தின் வசனத்தைக் கூறி.. ‘வங்க மக்கள் யாருக்கும் அஞ்ச கூடியவர்கள் கிடையாது. மத்திய அரசை பார்த்து எங்களுக்கு அச்சம் இல்லை’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சாடியுள் ளார். ‘என் கதையை உங்களால் முடிக்கமுடியாது’ என்றும் மத்திய அரசுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

                                      ******************

சூப்பர் ஹீரோ; நான் அல்ல: நடிகர் சோனு சூட்-தான்.. 

தெலுங்கானா நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.டி. ராமாராவ் செய்த உதவிகளுக்காக, அவரை சமூகவலைதளவாசி ஒருவர் ‘சூப்பர் ஹீரோ’ என்று வர்ணித்திருந் தார். இந்நிலையில், ‘தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மட்டுமே’ என்றும், உண்மையான ‘சூப்பர் ஹீரோ’ஓராண்டாக உதவிவரும் நடிகர் சோனுசூட்தான் என்றும் அமைச்சர் பதிலளித் துள்ளார். இந்நிலையில் அமைச்சரின் பாராட்டுக்கு, நடிகர் சோனுசூட் நன்றி தெரிவித்துள்ளார்.

                                      ******************

ஜெத்மலானி மகனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி

மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானியை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்து, குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள் ளார். சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற அடிப்படையில் இந்தியஅரசியலமைப்பின் 80-ஆவது பிரிவின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான மறைந்த ராம் ஜெத்மலானியின் மகன்தான் மகேஷ் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.

                                      ******************

குடியுரிமை கணக்கெடுப்புக்கு எதிராக ஐயுஎம்எல் வழக்கு

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்,ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் குடியுரிமை தொடர்பான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் களுக்கு எதிரான இந்த குடியுரிமை கணக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

;