india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

நேபாள பிரதமருக்கு  மோடி வாழ்த்து!

நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா (75) அந் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றிபெற் றுள்ள நிலையில், ஷேர்பகதூர் தேவ்பாவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “அனைத்து துறைகளிலும் நமது தனித்துவமான கூட்டுறவை மேலும்வலுப்படுத்த உங்களுடன் இணைந்துபணியாற்றுவதை எதிர்நோக்கியுள் ளேன்” என்று மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

                                     *****************

பஞ்சாப் காங்கிரஸ்  தலைவரானார் சித்து!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்துவைநியமித்து, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள் ளார். மேலும், சங்கத் சிங் கில்ஜியான், சுக்விந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகிய 6 பேரை செயல்தலைவர்களாகவும் சோனியா நியமித் துள்ளார். இதனிடையே முதல்வர் அம்ரீந்தர் சிங்கை விமர்சித்ததற்காக சித்துபொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுக்பால் கைரா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் கூட்டறிக்கைவெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.

                                     *****************

கொரோனாவிலிருந்து  மோடியால்தான் மீள்கிறோம்!

உத்தரப் பிரதேசத் தின் 6 பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட் டுள்ள ஆக்சிஜன் ஆலைகளை ஒன்றிய பாஜக அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்துப் பேசியுள்ளார். அப்போது, பிரதமர் மோடியின் முயற்சியால்தான் கொரோனாவிலிருந்து மீள்கிறோம் என்று கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக போரிட பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கைகளே காரணம் என்றும் ‘காமெடி’ செய் துள்ளார்.

                                     *****************

காலுக்கு ‘மாஸ்க்’ போட்ட பாஜக அமைச்சர்!

உத்தரகண்ட் மாநில பாஜக அமைச்சரும்- சாமியாருமான யத்தீஸ்வர் ஆனந்த் முகக் கவசத்தை காலில் அணிந்திருந்த சம்பவம் சமூகவலைதளங் களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. முகக்கவசத்தை எங்கு அணியவேண்டும் என அமைச்சருக்கு யாராவது எடுத்துக் கூறுங்கள் என்றும் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க இவர் போன்றவர்கள்தான் காரணம் என்று பலர் கடுமையாக சாடி வருகின்றனர்.

                                     *****************

மகாராஷ்டிராவில் என்சிபி-பாஜக கூட்டணி அரசு?

பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்சந்தித்துப் பேசிய நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சிஅமைக்க வேண்டும்என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே‘விருப்பம்’ தெரிவித்துள்ளார். “பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு வெவ்வேறு பக் கங்களை ஒன்றிணைக்க முயல்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்றும் சம்பந்தமில்லாமல்உளறிக் கொட்டியுள்ளார்.

;