india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி சேருவோம்!

“சிவசேனா கட்சி எப்போதும் எங்கள் எதிரிக் கட்சி அல்ல. எங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத்தான் மகாராஷ்டிர மாநில மக்கள் வாக்களித்தனர். ஆனால், எதிர் பாராதவிதமாக எங்கள் கூட்டணியில் இருந்து அவர்கள் விலகி விட்டனர். சூழ்நிலையை பொறுத்து சிவசேனா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று மகாராஷ்டிர மாநில பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள் ளார்.

                              **************

கட்சி மாறுவது அரசியலில் சகஜம்!

“கட்சி மாறுவது அரசியலில் பொதுவானது. இதற்கு நானோ, காங்கிரஸ் கட்சியோ விதிவிலக்கல்ல. எல்லா கட்சிகளிலும் இது போன்ற உதாரணங்கள் நிகழ்ந்துள் ளன. நாங்கள் பாஜக-வில் இருந்து பிரதாப் கவுடா பாட்டிலைக் கூட்டி வந் தோம். எனவே, காங்கிரசிலிருந்து பாஜகவுக்குப் போன 17 எம்எல்ஏ-க்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமென்றாலும் காங்கிரஸூக்கு திரும்பி வரலாம்” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

                              **************

உ.பி. தேர்தலில் ஒவைசி சவாலை ஏற்கத் தயார்!

“உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சியமைக்க விடமாட்டோம். ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவதையும் அனுமதிக்க மாட் டோம்” என்று மஜ்லிஸ்கட்சித் தலைவர் ஒவைசி கூறியிருந்தார்.இந்நிலையில், “2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுவதாக இருந்தால், சவால் விட்டால் அதை ஏற்க பாஜக-வும் தயாராக இருக்கிறது” என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத்பதிலளித்துள்ளார்.

                              **************

கோட்சேவின் சிந்தனையே கொலைக்குத் தூண்டுகிறது!

“சிலர், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக் குதல் நடத்துகிறார் கள். இது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால், கலவரம் செய்வது, கொலைசெய்வது போன்றவை கோட்சேவின் இந்துத்துவா சிந்தனை. இதன் விளைவாகத்தான் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியாத அந்த கிரிமினல் களுக்கு ஜூனைத், அக்லக், பேலுகான், அக்பர், அலிமுதீன் என்று பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி சாடியுள்ளார்.

;