india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

வரிச் சுமையைக் குறைத்து விட்டோம்..!

‘‘இந்தியாவின் பொருளாதார அமைப் பில் ஜிஎஸ்டி, ஒரு மைல் கல். இது வெளிப்படைத் தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும் அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரிகள், இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது” என்றுபிரதமர் மோடி தனக்குத்தானே கைதட்டிக் கொண்டுள்ளார். சரக்கு மற்றும்சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (Goodsand Services Tax- GST) 2017 ஜூலை1-இல் அவசர அவசரமாக அமல்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

                                   **************

105 எம்.பி.க்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 105 நாடாளுமன்ற உறுப்பினர் கள் இன்றும் கொரோனாதடுப்பூசி போடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 18 நிலவரப்படி மாநிலங்களையில் 9 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைக் கூட இன்னும் போட்டுக் கொள்ளவில்லை. அதேபோல மக்களவையிலும் 96 உறுப்பினர்கள் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

                                   **************

மோடிக்கு மாம்பழங்களை பரிசளித்த மம்தா!

மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு ஹிம்ஸாகர், மால்டா, லட்சுமன் போக் (Himsagar, Malda and Lakshmanbhog) ஆகிய தங்கள் மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த மாம்பழ ரகங்களை பரிசாகதில்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றது முதலே இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும், இது மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் என்றும்மம்தா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கும் இதேபோல மாம்பழங்களை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

                                   **************

தில்லிக்குச் சென்றாலே முதல்வர் மாற்றம்தானா?

“கர்நாடகத்தில் முதல்வர் மாற்றப்படுவார் என்பது முடிந்துபோன கதை. அதனால்முதல்வர் மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். மீதம் உள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பாதான் முதல்வராக இருப் பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்று எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூறியுள்ளார். “கர்நாடக பாஜகவினர் தில்லிக்கு சென்றாலே முதல்வரை மாற்றத்தான் செல்வார்களா?” என்றும் அவர் கோபப்பட்டுள்ளார்.

                                   **************

தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேஜஸ்வி

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் தவணை ‘ஸ்புட்னிக்’ கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அவருடன் அவரது சகோதரர் தேஜ் பிரதாப்பும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

;