india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

தலைமைச் செயலாளரை  அனுப்ப முடியாது..!

மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டாபாத்யாயாவை மே 31-ஆம் தேதிக்குள் மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் மத் திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவு ஒருதலைப்பட்சமானது; இதனை ஏற்கமுடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜிபதிலளித்துள்ளார். கொரோனா சூழலில்பண்டாபாத்யாயாவை மத்தியப் பணிக்குஅனுப்ப முடியாது என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

                                  ************

நடிகை கங்கனாவின் பாதுகாவலர் கைது!

பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத் தனது அடாவடியான பேச்சுக் களுக் காக காவல்துறை வழக்கு, புகார்களை எதிர்கொண்டு வருபவர் ஆவார். இந்நிலையில், கங்கனாவின் பாதுகாவலர் குமார்ஹெக்டேவும், வழக்கு ஒன்றில் மும்பை
போலீசாரால் கைது செய்யப்பட்டுள் ளார். திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பெண் ஒருவரை ஏமாற்றிய வழக் கில் ஹெக்டே சிக்கியுள்ளார்.

                                  ************

தனியாருக்கு மட்டும் கிடைப்பது எப்படி?

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகள் ஜூன் மாதம்தான் கிடைக் கும் என்று மத்திய அரசு கூறுகிறது. இப்படி மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்று மத்திய அரசு கைவிரிக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு மட் டும் தடுப்பூசிகள் கிடைப்பது எப்படி? என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார். 

                                  ************

சாமியார் ராம்தேவின் ‘மருத்துவ’ மாற்றம்...

‘இன்னும் ஒரு ஆண்டுக்குள் நான் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர் களாக மாற்ற முடிவு செய்துள்ளேன்’ என்றுகார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூறியுள்ளார். நவீன அறிவியல் மருத்துவம் குறித்து மக்களிடம்ராம்தேவ் பீதிஏற்படுத்துவதைக் கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு (FORDA) ஜூன் 1 அன்றுகறுப்புத் தினம் அறிவித்துள்ள நிலையில், ராம்தேவ் இவ்வாறு சவால் விட் டுள்ளார்.

                                  ************

காப்பி, டீ, நிலக்கடலை அனுப்பி வைத்த கென்யா!

கொரோனா 2-ஆவது அலையால், இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், 40-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு தேவையான மருந்துப் பொருட்கள், உபகரணங் களை வழங்கி உதவி வருகின்றன. அந்தவகையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில்ஒன்றான கென்யா 12 டன்கள் காப்பி, டீமற்றும் நிலக்கடலையை இந்தியாவுக்கு கொரோனா நிவாரண உதவியாக அனுப்பி வைத்துள்ளது.

;