india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

பாஜக தொலைந்தால்தான் கர்நாடகத்திற்கு நல்லது!

“எடியூரப்பா முதல் வர் பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல் லது நடக்காது. ஒரு ஊழல் முதல்வர் சென்று விட்டார். அவருக்கு பதிலாக யார் பதவியில் வந்தாலும் அவரும் ஊழல்தான் செய் வார். பாஜக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும். பாஜகவால் மாநில நலனுக்காக வேலை செய்ய முடியாது” என்றுகர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

                                ***************

அமலாக்கத்துறைக்கு சிதம்பரம் நோட்டீஸ்!

ப.சிதம்பரம் 2007-ஆம் ஆண்டில் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன் எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி திரட்டமுறைகேடாக ஒப்புதல் அளித்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.இவ்வழக்கில் சிதம்பரத்தை 2019 அக்டோபர் 22 முதல் டிசம்பர் 4 வரை சிறையிலும் அடைத்தது. எனினும், அமலாக்கத்துறை அதன் குற்றப்பத்திரிகை நகலை இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை ஆகஸ்ட் 9-க்குள் பதிலளிக்க வேண்டும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                ***************

இதயங்களுக்கு இடையிலான இடைவெளி குறையவில்லை!

“தில்லியில் பிரதமருடனான சந்திப்பின் போது, ‘ஜம்மு-காஷ்மீருக்கும் தில்லிக்கும் இடையேயான இடைவெளியையும் மக்களின் இதயங்களுக்கு இடையேயான இடைவெளியையும் குறைக்க விரும்புகிறேன்’ என்று பிரதமர் கூறினார். ஆனால், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்து இப்போது ஒரு மாதம் ஆகிவிட்டபோதும், எந்தவித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை. அவநம்பிக்கைதான் ஏற்பட்டிருக்கிறது” என்றுதேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரு
மான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

                                ***************

பீகார் அமைச்சர்  உ.பி.யில் சிறைவைப்பு!

தனக்கு அநீதி இழைத்தவர்களை ஆயுதம்ஏந்தி பழிவாங்கியவர்பழங்குடிப் பெண் பூலான் தேவி. பின்னாளில் அவர் அரசியலில் ஈடுபட்டு சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், உ.பி. மாநிலம் வாரணாசி ராம்நகர்பகுதியில் பூலான் தேவி சிலை திறக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விகாஸ் ஷீல் இன்சான் கட்சி தலைவரும், பீகார்அமைச்சருமான முகேஷ் சஹானி சிலையைத் திறப்பதற்காக வந்திருந்தார்.ஆனால், அவரை விமானநிலையத்திலேயே உ.பி. போலீசார் சிறை வைத்தனர்.

                                ***************
குப்பையை அள்ளிக் கொட்டிய பாஜக எம்எல்ஏ!

கர்நாடகாவிலுள்ள பெலகாவி நகரில் குப்பைஅள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப் படாமல் இருந்துள்ளது. இதையடுத்து, பெலகாவி தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், டிராக்டரில் குப்பையை அள்ளிச் சென்று விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள, மாநகராட்சி ஆணையாளர் வீட்டு முன்பு கொட்டியுள்ளார். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ-வே போராட்ட நாடகம் போட்டுள்ளார்.

;