india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

வரிக்கொள்ளையில்  ஓடும் மோடி அரசு!

தில்லியிலும் பெட்ரோல் விலை ரூ. 100-ஐத் தாண்டியுள்ள நிலையில், “பிரதமர் மோடி வரியைக் காட்டி மிரட்டிப் பணம் வசூலித்து அரசை நடத்தி வருகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திகுற்றம் சாட்டியுள்ளார். நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடுகிறது. ஆனால், மோடி அரசோ வரிக் கொள்ளையில் ஓடுகிறது’’ என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

                                     *****************

‘பெட்ரோல் கீ பாத்’ நடத்துங்கள், மோடி..! 

பெட்ரோல் விலை 14 மாநிலங்களிலும், டீசல் விலை 3 மாநிலங்களிலும் 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், மோடி அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர் சித்துள்ளார். “நமது பிரதமர் ‘மன் கீபாத்’ நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறார். அதை விடுத்து அவர் ‘பெட்ரோல் கீ பாத்’, ‘டீசல் கீ பாத்’, ‘வேக்சின் கீ பாத்’ உள்ளிட்டவற்றை நடத்தலாம்” என்று சாடியுள்ளார்.

                                     *****************

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு பயனும் இருக்காது!

“ஒன்றிய அரசின் புதிய அமைச்சரவையில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்களுக்கு பெரும் பான்மையாக அமைச் சர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,இந்த அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை” என்றுகாங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள் ளார்.

                                     *****************

ஹரியானா சிறைவாசிகள் 13 பேர் தப்பியோட்டம்!

ஹரியானாவின் ரிவாரி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரிவாரி உள்ள பிடெடி கிராமத்தில் புதிய சிறைகட்டப்பட்டது. இந் நிலையில், இந்த புதிய சிறையின் கிரில்லை வெட்டி எடுத்து 13 கைதிகள் தப்பி சென்றுள்ளனர். இவர்கள்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், அவர்களைப் பாஜக அரசின் காவல்துறை கிராமம் கிராமமாக தேடி வருகிறது.

                                     *****************

கரும்பலகையை  உடைத்த ஆசிரியர்!

நந்திகிராம் தேர் தல் முடிவு தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கவுசிக் சந்தா விசாரிக்கக் கூடாது என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில், நீதித்துறையை மம்தா தவறாக சித்தரிக்கிறார் என்றுகூறி நீதிபதி கவுசிக் சந்தா ரூ. 5 லட்சம்அபராதம்விதித்தார். அதேநேரம்மம்தா கோரியபடியே வழக்கு விசாரணையிலிருந்தும் விலகிக் கொண்டார். இதுதொடர்பாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நீதிபதி கவுசிக் சந்தாவின் செயல், “மாணவன் சரியாகத்தான் இருக்கிறார் என்று தெரிந்தும், ஆசிரியர், கரும் பலகையை உடைப்பதை போல இருக்கிறது” என்று திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா விமர்சித் துள்ளார்.

;