india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மாணவர்கள் அம்பேத்கரை பின்பற்ற வேண்டும்!

“2047-இல் இந்தியா பாகுபாடற்ற, வளா்ந்த நாடாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் நமது தனி மற்றும் சமூக வாழ்வில் நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும். டாக்டர்  அம்பேத்கா் கூறியது போல, கல்வி  கற்றவர்கள், சமூகத்தின் நலனுக்காக பாடுபட முன்வரவில் லை எனில், கற்ற கல்வி அா்த்தமில்லாதது ஆகிவிடும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

                                       *************** 

கழிப்பறைத் திட்டத்துக்கு  மோடியின் பெயர்

‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில்கடந்த 7 ஆண்டுகளில்,13.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான சாதனையாகும். எனவே, இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடியின் பெயரைச் சூட்டுவதே மரியாதை மற்றும் பெருமையின் அடையாளமாக அமையும்” என்று பாஜக தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடக எம்எல்ஏ-வுமான சி.டி. ரவி கூறியுள்ளார்.

                                       *************** 

சொத்துக் குவிப்பு வழக்கு ஜெகன் கட்சியில் பரபரப்பு!

ஆந்திர முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி மீது,2010-இல் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனி டையே இந்த வழக்கில் ஜெகனுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சிபிஐ நீதிமன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 15-ஆம் தேதி தேர்தல் தீர்ப்பு  வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ஜெகனின் ஜாமீன் ரத்தானால், அவர் சிறைசெல்ல நேரிடும் என்பதால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக் குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் ஜெகனின் மனைவி பாரதியா அல்லது கட்சியின் வேறு ஏதேனும் ஒருவரா என்று விவாதங்களில் இறங்கி யுள்ளன.

                                       *************** 

மேற்கு வங்க வன்முறை:  சிபிஐ 9 வழக்குகள் பதிவு!

மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வாரம்சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி 4 குழுக்களை அமைத்துவிசாரணையைத் துவங்கியுள்ள சிபிஐ அமைப்பு,கொலை, பாலியல் வல்லுறவு தொடர்பாக 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது. சம்பவ இடங்களுக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்திவருகிறது.

                                       *************** 

அமெரிக்கா உடனான பயிற்சி துவங்கியது!

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை களுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு துவங்கிய மலபார் கூட்டுப் பயிற்சியில், 2015-இல் ஜப்பான்கடற்படையும் 2020-இல்ஆஸ்திரேலிய கடற்படையும் இணைந்தன. அதனடிப்படையில் வியாழனன்று துவங்கிய 25-ஆவது மலபார் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ அமைப்பு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றுள்ளன. ஆகஸ்ட் 29 வரை இந்தப்பயிற்சி நடக்கிறது.

;