india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

உ.பி.யில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம்!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத் தாண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி 400 இடங்களில் வெற்றிபெறும் என்று அந்தக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். முன்பு 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறியிருந்தேன். ஆனால்,பாஜக மீது மக்களுக்கு உள்ள கோபத்தைப் பார்க்கும் போது, 400 இடங்களில் கூட வெற்றிபெறுவோம் என்று அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

                                     **********

ம.பி. பாஜக அமைச்சர்ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

தொடர்மழை - வெள்ளத்தால் மத்தியப் பிரதேசம் கடுமையான பாதிப்பை சந்தித்துள் ளது. குறிப்பாக, சிவ் புரி, ஷியோப்பூர், குவாலியர் மற்றும் தாதியாஉள்ளிட்ட பகுதிகளில் 1,800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால்சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளப் பாதிப்பை நேரில் பார்வையிடச்சென்ற ம.பி. மாநில உள்துறை அமைச்சர்நரோட்டம் மிஸ்ரா வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அவரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புப் படை வீரர்கள்மீட்டுள்ளனர்.

                                     **********

ஓணம் பண்டிகைக்கு ஊரடங்கு இல்லை!

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் 22-ஆம் தேதி வரும் ஓணம் பண்டிகை நாட்களில் கேரளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது. சனிக் கிழமை ஊரடங்கும் இனி இருக்காது என்றுகூறியுள்ள கேரள அரசு, ஆயிரம் மக்கள் தொகையில், 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள கடைகளுக்கு மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                     **********

மாநிலங்களுக்கே மீண்டும் அதிகாரம்!

102-ஆவது அரசியல் சட்ட திருத்தம், சமூக, கல்வி ரீதியாகபின்தங்கிய சாதிகளைஓபிசி பட்டியலில் சேர்க் கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பதாக கடந்த மே 5-ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்து இருந்தது. இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

                                     **********

கழிவகற்றும் பணியில் 941 பேர் உயிரிழப்பு!

மனிதக் கழிவகற் றும் பணியின்போது (Manual scavenging) ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதேநேரம், கடந்த 1993 முதல் செப்டிக் டேங்குகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம்செய்யும் போது 941 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 213 பேரும், அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களிலும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளதாக ஒன்றியஅரசு கூறியுள்ளது.

;