india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

மேற்குவங்கத்தில் இன்று 5-ஆம் கட்டத் தேர்தல்

மேற்குவங்கத்தில் 5-ஆம் கட்டமாக, கலிம்ம்போங், டார்ஜிலிங், ஜல்பைகுரி, 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்களைச் சர்ந்த 45 தொகுதிகளில் சனிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல ஆந்திராவில் திருப்பதி மக்களவைத் தொகுதிக்கும், ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்களில் தலா 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

                                        **************

கொரோனாவை இயற்கைப் பேரிடராக அறிவியுங்கள்...

‘வெள்ளம், இடி தாக்குதல், கனமழையால் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதத்திற்கு இயற்கை பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்கமுடியும். இந்நிலையில், கொரோனாவை யும் மத்திய அரசு இயற்கைப் பேரிடராக அறிவித்தால், மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவு செய்ய முடியும். எனவே,இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

                                        **************

பணமில்லாமல் திரும்பிய ராமர் கோயில் காசோலைகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு, கடந்த ஜனவரி 15 அன்று நாடு முழுவதும் நன்கொடை வசூலைத்துவக்கியது. இதில் தற்போது வரை ரூ. 5 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பல்வேறு நபர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ. 22 கோடி மதிப்பிலான சுமார் 15 ஆயிரம் காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                        **************

1 மணிநேரத்திற்கு  45 ஆம்புலன்சுகள்!

‘குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரி  லுள்ள சிவில் மருத்துவமனையில் 2120படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது வரை 2008 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு மணி நேரத்திற்குள் 45 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம். வரும் நாட்களிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால் கடும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று அந்த மருத்துவமனையின் கண்காணிப் பாளர் டாக்டர் ஜே.வி. மோடி அச்சம் தெரிவித்துள்ளார். இங்கு சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்சில் இருந்தவாறே நோயாளி ஒருவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

                                        **************

உடல்களை எரிப்பதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம்?

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்ல்கள், பெங்களூருவில் 4 மின் மயானங் களில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிணத்திற்கும் 45 நிமிடங்கள் தேவைப்படும் என்பதால், இங்கும் பிணங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இதனிடையே, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யரூ. 30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ள னர்.

;