india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள வேண்டாம்!

“பாஜகவின் உண் மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட் சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ, அல்லது மரியாதைக் குறைவான செயல்பளிலோ ஈடுபட வேண்டாம்” என கர்நாடகமுதல்வர் எடியூரப்பா 26-ஆம் தேதி தான்பதவி விலகப்போகும் முடிவை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

                               *************

எடியூரப்பா இல்லாமல்  பாஜக ஆள முடியாது!

“கர்நாடகத்தில் முதன்முதலில் பாஜகஆட்சியைக் கொண்டுவந்தவர் எடியூரப்பா. அவரை நீக்கச் சதி நடக் கிறது. அவர் இல்லாமல் மாநிலத்தில் பாஜக-வை நடத்த முடியாது. எடியூரப்பா மீண்டும் பாஜக-வுக்கு வந்தபின்தான் கட்சி வெற்றி பெற முடிந்தது. தற்போது எதற்காக மறுபடியும் அதே தவறைச் செய்கிறீர்கள்?” என பாஜக தலைமையை அக்கட்சியின் எம்.பி. சுப்பிரமணியசாமி டுவிட்டரில் விமர்சித் துள்ளார்.

                               *************

ராமன் சிங்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பாஜக!

2023-இல் நடைபெறும் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலிலும், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர் ஆகும் கனவில் முன்னாள் முதல்வர் ராமன்சிங் இருந்து வந்தார்.ஆனால், இந்தமுறை பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப் போவது இல்லை என்று கூறி, அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான புரந்தேஸ்வரி, ராமன் சிங் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியுள்ளார்.

                               *************

எதிர்க்கட்சியே இல்லாத நாகாலாந்து பேரவை!

நாகாலாந்தில் 25 இடங்களுடன் தனிப் பெருங்கட்சியாக என்.பி.எப். இருந்தது. எனினும், 20 உறுப்பினர் களைக் கொண்ட என்.டி.பி.பி.-யும், 12 உறுப் பினர்களைக் கொண்ட பாஜகவும் இணைந்து கூட்டணி அரசு அமைந்தன. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான என்.பி.எப். எம்.எல்.ஏ.க்களை கொஞ்சம் கொஞ்சமாக என்டிபிபி கட்சிஇழுக்கத் துவங்கியது. இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட எண்ணிய என்பிஎப்கட்சி, தானும் என்டிபிபி- பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் நாகாலாந்தில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை ஏற்பட உள்ளது.

                               *************

கல்யாண்சிங் கவலைக்கிடம்!

உ.பி. மாநில முன் னாள் பாஜக முதல்வர் கல்யாண் சிங் கடந்த ஜூலை 4 அன்று லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவரதுஉடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.ஜூலை 20 முதல்  கல்யாண்சிங்குக்கு உயிர்காக்கும் சாதனங்கள்பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 1992-ஆம் ஆண்டு கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோதுதான் பாபர் மசூதிஇடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

;