india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

நீதிபதி கவுசிக்கை மாற்ற வேண்டும்...

நந்திகிராம் தொகுதியில், 1957 வாக்குகள் வித்தியாசத்தில் தோற் றுப் போன மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக வேட் பாளர் சுவேந்து அதிகாரியின் வெற்றியைஎதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஜூன் 24 அன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிபதிகவுசிக் சந்தா இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், ஏனெனில் அவர் பாஜகவில் பணியாற்றியவர் என்றும் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

                                ****************

முதலிடம்தான் எனினும் செல்வாக்கில் சரிவு...

கொரோனா தொற்றின் 2-ஆவது அலைவிவகாரத்தில், இந்தியப் பிரதமர் மோடியின்நிர்வாகத் திறமையின்மை, அவரது செல்வாக்கில் கடும் சரிவைஏற்படுத்தி இருப்பதாகஅமெரிக்க புலனாய்வு தரவு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்ஸ் டிராக்கர்’ (Morning Consult’s tracker) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. 14 நாட்டுத் தலைவர்களின் பட்டியில் மோடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டு 75 புள்ளிகளைப் பெற்றிருந்த அவர் இந்த ஆண்டு 66 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                ****************

விலை உயரவில்லை என்றால்தான் செய்தி!

மோடி ஆட்சியில் நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை என்றைக் காவது உயராமல் இருந்தால் மட்டுமே அது மிகப்பெரும் செய்தி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதான் மோடி அரசு நாட்டில் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சிஎன்றும் டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள் ளார்.

                                ****************

கர்நாடகத்தில் எந்த குழப்பமும் இல்லை!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜகஎம்எல்ஏ-க்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அதற்கேற்பவே எடியூரப்பா விரைவில் நீக்கப்படுவார் என்று செய்திகளும் வெளியாகி வருகின்றன. ஆனால், மாநிலத்தில் அரசியல்குழப்பம் எதுவும் இல்லை என எடியூரப்பா கூறியுள்ளார். ஏதேனும் பிரச்சனை இருந் தால், அது குறித்து பேசி தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                ****************

முகுல்ராயின் பதவியை பறிக்க வேண்டும்!

பாஜக சார்பில் வெற்றி பெற்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முகுல் ராயை, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தலைவருக்கு, பாஜக சட்டப்பேரவைக் குழுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கடிதம் எழுதி உள்ளார். இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

;